ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வதுடன், பிறரையும் வாழவிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக டிச., 10ம் தேதி, மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மனித உரிமைகள
பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும்வலியுறுத்துவதே இதன் நோக்கம். 1948, டிச.10ம் தேதி ஐக்கிய நாடுகளின்
பொது சபையால் உலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை, பெருமைப்படுத்தும் விதத்தில் 1950ல் இத்தினம் தொடங்கப்பட்டது. உலகில் வாழும் அனைத்து மனிதர்தர்களும்
சமமானவர்களே. ஒருவரிடமிருந்து நாம் எவ்வித உரிமையை எதிர்பார்க்கிறோமோ, அதே உரிமையை மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும். யாரும் யாரையும் அடிமைப்படுத்தக் கூடாது. ஒருவர் பிறக்கும் போதே, அவருக்கான மனித உரிமைகள் வந்து விடுகின்றன. உயிர் வாழ்வதற்கான உரிமைகள், கருத்து சுதந்திரம், மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான கல்வி,
மருத்துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் மற்றும்
ஒரு மனிதனாக வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் எனலாம். இது அனைத்து மக்களும் அங்கீகரிக்கக்கூடிய சர்வதேச
அங்கீகாரத்தை பெற்றவை. இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் 1991, அக்.,13ல் இந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. உலக நாடுகளிலும், இந்தியாவிலும் அடிமைத்தனம், இனவெறி, பாலியல் குற்றங்கள் என மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன. இதை முற்றிலும் தடுப்பதற்கு, அனைத்து நாடுகளும் முயற்சி எடுக்க வேண்டும். நியூயார்க்கில் உள்ள ஐ.நா.,
தலைமையிடத்தில் 1968ல் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மனித
உரிமைகளுக்கான ஐ.நா., சபை விருது வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment