ஒடிசாவில் இருந்து,
தமிழகத்திற்கு வேலைக்குச் செல்ல
முற்பட்ட, 400
குழந்தை தொழிலாளர்களை, ரயில்வே போலீசார் மீட்டனர்.
ஆந்திர மாநிலம், நெல்லூர் ரயில்
நிலையத்தில், நேற்று முன்தினம்,
ரயில்வே போலீசார்,
பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
அப்போது, ஒடிசா மாநிலம்,
புவனேஸ்வரில் இருந்து வந்த ரயிலில்
இருந்து, 400 குழந்தை தொழிலாளர்கள்,
நெல்லூர் ரயில் நிலையத்தில்
இறங்கினர். சந்தேகமடைந்த போலீசார்
விசாரித்தபோது, ஒடிசாவில் இருந்து,
சென்னைக்கு,
குழந்தை தொழிலாளர்களாக
அனுப்பியது தெரிந்தது. 'எங்கள்
விருப்பத்தின்படியே செல்கிறோம்;
எங்களை யாரும்
கட்டாயப்படுத்தி அழைத்து வரவில்லை'குழந்தை தொழிலாளர்களை, ரயில்வே போலீசார் மீட்டனர்.
என, அவர்கள் தெரிவித்தனர். சென்னைக்கு, மொத்தமாகச் சென்று ரயில் நிலையத்தில் இறங்கினால், சிக்கல் வரும் என்பதால், நெல்லூரில் இறங்கி, பின் பல்வேறு பிரிவினராகப் பிரிந்து, சென்னை செல்ல திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, 400 குழந்தை தொழிலாளர்களும் மீட்கப்பட்டு,
சென்னை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நெல்லூர் போலீஸ் உயர் அதிகாரி லட்சுமி காந்த் கூறுகையில், ''வழக்கு விசாரணை, சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. 400 குழந்தைகளும், ரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டு,
சென்னை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்,'' என்றார்.
No comments:
Post a Comment