Thursday, December 05, 2013

ஆசிரியர்களின் ஊதியம் அதிகரிப்பு

ஒடிசா, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் ஊதியம் உயர்த்தி வழங்க ஒடிசா அரசு அறிவித்துள்ளது. பணி மூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் வழங்கப்படும் ஊதியம், தொழில் முன்னேற்ற மேம்பாட்டு காப்பீடு ஆகியவை இந்தாண்டு முதல் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஆசிரியர்களின் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் உயர்த்தி வழங்கப்படும். குறைந்தப்பட்சம் 6 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் அனுபவம் பெற்றவர்களுக்கு மட்டுமேஇந்த உயர்வு செல்லும் என்று மாநில சட்டசபை கூட்டத்தில், பள்ளி மற்றும் கல்வித்துறை அமைச்சர் ரபிநாரயன் நந்தா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment