Thursday, December 05, 2013

சென்னையில் முதன் முதலாக ஆதரவற்ற சிறுவர்களுக்கு இரண்டுஇடங்களில் உண்டு உறைவிடபள்ளி அமைக்கமாநகராட்சி முடிவு

சென்னையில் முதன் முதலாக, ஆதரவற்ற சிறுவர்களுக்கு இரண்டு இடங்களில், உண்டு, உறைவிட பள்ளி அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஆதரவற்ற மற்றும் சாலையோரம் வசிக்கும் ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த, உண்டு, உறைவிட பள்ளிகள் நடத்தப்படுகின்றன. சென்னையில் மாநகராட்சியும், அனைவருக்கும் கல்வி இயக்ககமும் இணைந்து, தற்போது மூன்று உண்டு, உறைவிட பள்ளிகளை நடத்துகின்றன.அவை, சிறுமிகளுக்கு மட்டுமானது. அவற்றில், ஆறு முதல், 14 வயது வரை உள்ள சிறுமியர் தங்கி, உணவு உட்கொண்டு கல்வி பயில ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

தற்போது இந்த மூன்று உண்டு உறைவிட பள்ளிகளில், 81 சிறுமியர் படிக்கின்றனர். சென்னையில் சிறுவர்களுக்கு இதுபோன்ற உண்டு, உறைவிட பள்ளிகள் இல்லாததால், ஆதரவற்ற சிறுவர்களுக்கு கல்வி அளிக்க முடியாத
நிலை இருந்தது.தற்போது இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அனைவருக்கும் கல்வி இயக்ககம் இரண்டு இடங்களில் சிறுவர்களுக்கான உண்டு உறைவிட பள்ளிகளை நடத்த உள்ளது.

இதற்கு மாநகராட்சி ஒப்புதல் தெரிவித்துள்ளது. இரண்டு பள்ளிகளில் 150 சிறுவர்கள் வரை சேர்க்கப்படுவர் என்றும், பள்ளிகள் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment