Monday, December 02, 2013

புத்தகத்தைப் பார்த்து எழுதும்கேள்விகளுக்காக சிபிஎஸ்இமாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்ககல்வி வாரியம் முடிவு

கடந்த வருடமே மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தில் (சிபிஎஸ்இ) படிக்கும்
மாணவர்களுக்கு புத்தகங்களைப் பார்த்து கேள்விகளுக்கு விடை எழுதும்
முறையை அறிமுகப்படுத்த கல்வி வாரியம் முடிவு செய்தது.
அதன்படி இந்தக் கல்வியாண்டில் ஒன்பது மற்றும் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தற்போது இந்தத் தேர்வுமுறை பரீட்சார்த்தமாக
துவக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்படும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது. இதன்படி, கேள்வித்தாளை படிப்பதற்கு அளிக்கப்படும் 15 நிமிடங்கள் தவிர தேர்வு எழுதும் நேரம் மூன்றிலிருந்து மூன்றரை மணி நேரமாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் குறித்த சுற்றறிக்கை ஒன்றினை சிபிஎஸ்இ இயக்குநர் சாதனா பரஷார் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளார்.

புதிய தேர்வு முறைகளுக்கான பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படும். மேலும், இந்தத் திட்டத்தில் தேர்வு எழுதும்
மாணவர்களுக்கு புத்தகத்தைப் பார்த்து எழுதும் பகுதிகளில் அவர்கள்
பெறும் மதிப்பெண்களும் அவர்கள் எப்போதும்போல் எழுதி பெறும்
மதிப்பெண்களுடன் சேர்த்துக் கொள்ளப்படும் வகையில் திருத்தங்கள்
செய்யப்பட்டுள்ளன. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம்,
ஹிந்தி, கணிதம், அறிவியல் சமூக அறிவியல் போன்ற பிரதான
பிரிவுகளில் இத்தகைய தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களைக் கொண்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு புவியியல், பொருளாதாரம் மற்றும் உயிரியல் பாடத் திட்டங்கள் இந்த முறையில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் இறுதித் தேர்வில் இந்தப் புதிய முறை கடைபிடிக்கப்படும்
என்று சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது.இந்த முறை மாணவர்களின் படிப்பாற்றல் திறனை அதிகரிக்க உதவும் என்று கல்வி வாரியம்
நம்பிக்கை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment