தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில்
கோட்டை நோக்கி பேரணி நடத்துவதாக
அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காககோட்டை நோக்கி பேரணி நடத்துவதாக
அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம்
ஸ்டேடியம் அருகில் ஆசிரியர்கள் கூடினார்கள்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும்
அதிகமான முதுநிலை பட்டதாரி ஆசிரியர்–
ஆசிரியைகள் வந்திருந்தனர்.
பேரணிக்கு மாநில தலைவர் மணிவாசகம்
தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர்
பிரபாகரன், நிர்வாகிகள் ரபி, பாலசுப்பிரமணியன்,
வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில
இந்திய அரசு பணியாளர் சங்க பொதுச்செயலாளர்
கு.பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு தொடக்கப்
பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில
பொதுச்செயலாளர் ரங்கராஜன், ‘ஐபெக்டோ’
அமைப்பின் தென்இந்திய செயலாளர்
அண்ணாமலை ஆகியோர்
கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
வந்திருந்த ஆசிரியர்களில் 100 பேர்
மொட்டையடுத்து பேரணியில் பங்கேற்றனர்.
பேரணி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில்
இருந்து புறப்பட்டு புதுப்பேட்டை, தெற்கு கூவாம்
ஆற்றுச் சாலை ஓரமாக
சிந்தாதிரி பேட்டையை சென்றடைந்தது.
பேரணியில் சென்றவர்கள்,
முதுகலை ஆசிரியர்களின் ஊதிய
முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்,
அரசாரணை 720–ஐ திருத்தம் செய்ய வேண்டும்,
தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட
வேண்டும் எனபன உள்பட 7 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கோரிக்கை அட்டைகளையும் ஏந்தி சென்றனர்.
பேரணியில், அரசு உதவி பெறும்
பள்ளி ஆசிரியர் அமைப்பின் மாநில செயலாளர்
வின்சென்ட் டி.பவுல்,
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச்
செயலாளர் தனசிங் ஐசக் மோசஸ், மாநில பொருளாளர்
திருஞானகணேசன் உள்பட ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
பேரணி முடிந்ததும் சங்க மாநில தலைவர்
மணிவாசகம் மற்றும் முக்கிய நிர்வாகிகள், முதல்–
அமைச்சரிடம் மனு கொடுப்பதற்காக
கோட்டை சென்றனர்.
No comments:
Post a Comment