மத்தியில் ஆளும் ஐ.மு.கூ.,வின்
காங்கிரஸ் தலைமையிலான அரசு, ஆதார் அடையாள
அட்டை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. "மக்கள்
பணம் மக்களுக்கே' என்ற "முழக்கத்துடன்' அரசு வழங்கும் மானியத்தொகை மக்களின் நேரடி வங்கிக்கணக்கில் செலுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இதற்கு ஆதார் அட்டை அவசியம். எனவே,
அனைவரும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும்
என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆதார்
அட்டையால் ஏராளமான குழப்பங்கள் வருவதாகவும்,
முழுவீச்சில் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுக்கும்
பணிகள் முடியாத நிலையில், "ஆதார் இருந்தால்
தான் சிலிண்டர் வழங்குவோம்,
இணைப்பு வழங்குவோம்' என, காஸ்
ஏஜன்ஸி நிறுவனங்கள் தெரிவித்து வருகிறது.
"ஆதார் அட்டை அவசியமில்லை' என,
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவிர, ஆதார்பணம் மக்களுக்கே' என்ற "முழக்கத்துடன்' அரசு வழங்கும் மானியத்தொகை மக்களின் நேரடி வங்கிக்கணக்கில் செலுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
அட்டைக் கேட்டு மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது' என, மத்திய அமைச்சர்
வீரப்பமொய்லி கூறியுள்ளார். ஆனால், மத்திய பெட்ரோலிய அமைச்சகம், ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இணைப்பு வழங்க வேண்டும்' என, காஸ்
ஏஜன்ஸிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த மனித உரிமைப்
பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் வக்கீல் ஆதிநாராயணமூர்த்தி தலைமையில், சிலர் திருச்சி கலெக்டர் அலுவலகதத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டர் ஜெயஸ்ரீயிடம் மனு அளித்த அவர்கள், ""ஆதார் அட்டை அவசியமில்லை என உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி காஸ் ஏஜன்ஸிகள், பள்ளிகளில் ஆதார் அட்டை கேட்டு கட்டாயப்படுத்துகின்றனர்,'' என்றனர். கலெக்டர் ஜெயஸ்ரீ, ""பெட்ரோலிய அமைச்சகம் காஸ் நிறுவனங்களுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது. அதில் நான் தலையிட முடியாது. பள்ளிகளில்
வேண்டுமானால், கட்டாயப்படுத்தக்கூடாது என கூறுகிறேன்,'' என்றார். குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாவட்ட முதன் மை கல்வி அலுவலக
அதிகாரியை அழைத்த கலெக்டர் ஜெயஸ்ரீ, ""பள்ளிகளில் பெற்றோரிடம், மாணவர்களிடம் "ஆதார்' அடையாள அட்டை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என சர்க்குலர் அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார்.ஆதார் விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள், உயர்
அதிகாரிகளே என்ன செய்வது எனத்தெரியாமல் விழிக்கும் நிலையில், திருச்சி கலெக்டர் பிறப்பித்த இந்த அதிரடி உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment