சென்னை மாநகராட்சி துவக்க
மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கில பயிற்சி வகுப்புக்களை, மேயர் சைதை துரைசாமி நேற்று துவக்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி துவக்க மற்றும்
நடுநிலை பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் 100 பேருக்கு, ஆங்கிலம் கற்பித்தல்
பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. புரசைவாக்கம், ராட்லர் தெரு, பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பயிற்சி வகுப்புகளை மேயர்
சைதை துரைசாமி இருநாட்களுக்கு முன் துவக்கி வைத்தார். டெக்
மகேந்திரா பவுண்டேஷனுடன் இணைந்து, மாநகராட்சி இந்த
பயிற்சியை நடத்துகிறது. சென்னை மாநகராட்சியில், 122 துவக்க
பள்ளிகளும், 92 நடுநிலை பள்ளிகளும் உள்ளன. இவற்றில் 119 பள்ளிகளில் தமிழ் வழியுடன், ஆங்கில வழிக் கல்வியும் உள்ளது. ஆங்கிலம் கற்பித்தல்
பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு ஆசிரியருக்கு வாரத்தில்,
இரண்டரை நாட்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படும். வரும், பிப்ரவரி மாதம் 22ம்
தேதி வரை பயிற்சி நடக்கும்.
No comments:
Post a Comment