Tuesday, January 28, 2014

100 சதவீத தேர்ச்சி காட்டிய 51 பள்ளிகளுக்கு கேடயம்: கல்வித்துறை வழங்கியது

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்
மாவட்டங்களில் 100 சதவீத தேர்ச்சியை காட்டிய 51 பள்ளிகளுக்கு கேடயம்
வழங்கப்பட்டது.10,
பிளஸ் 2 தேர்வுகளில் 70 சதவீதத்துக்கும்
குறைவாக தேர்ச்சி வீதம் பெற்ற
பள்ளிகளுக்கான ஆய்வுக் கூட்டம்
சென்னை சாந்தோமில் நேற்று நடந்தது. இதில்,
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்
மாவட்டத்தை சேர்ந்த
முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல்
முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக்
கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக்
கல்வி அலுவலர்கள், மெட்ரிக்
பள்ளி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் சபிதா,
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக
மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன்,
பள்ளிக்கல்வி துணை செயலர் பழனிச்சாமி,
பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன்,
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை மற்றும்
இணை இயக்குனர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
வீரமணி தலைமை தாங்கினார்.சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்
2012-2013ம் கல்வி ஆண்டு நடந்த பொதுத்
தேர்வில் 201 பள்ளிகள் 70 சதவீதத்துக்கும்
குறைவான தேர்ச்சி வீதம் பெற்றுள்ளன. அந்த
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்
வரவழைக்கப்பட்டு தேர்ச்சி சதவிகிதத்தை
அதிகரிக்க ஆலோசனை கூறப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம்
வகுப்புகளில் 100 சதவிகித தேர்ச்சி பெற்ற 51
பள்ளிகளுக்கு கேடயங்கள்¢ வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment