பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில்ஏற்கனவே நடைமுறையில்
இருந்த
வேலைவாய்ப்பு அலுவலக
பதிவு மூப்பு அடிப்படையிலான
ஆசிரியர் நியமன முறையை 2011–
ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக
அரசு ரத்து செய்தது.
அதற்கு மாற்றாக
இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்
தேர்வு அடிப்படையிலும்,
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்
போட்டித்
தேர்வு அடிப்படையிலும்
நியமிக்கப்படுவார்கள்
என்று தமிழக அரசு அறிவித்தது.
ஆசிரியர் நியமனத்தில் புதிய
நடைமுறையை தமிழக
அரசு அறிவித்ததுமே அதற்கு நான்
கடும்
எதிர்ப்பு தெரிவித்திருந்தேன்.
இந்த புதிய முறை ஊழலுக்கும்,
முறைகேட்டுக்கும் தான்
வழிவகுக்கும் என்று நான்
அப்போதே கூறியிருந்தேன்.
அதன்பின்னர், தகுதித்
தேர்விலாவது இட
ஒதுக்கீட்டை நடைமுறைப்
படுத்தி, இட ஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கு தனித்தனி தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்
ும்படி தமிழக
அரசை வலியுறுத்தினேன்.
சமூகநீதியில் அக்கறை கொண்ட
மற்ற தலைவர்களும் இந்த
கோரிக்கையை ஆதரித்தனர்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும்
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட
மற்றும் பழங்குடி வகுப்பைச்
சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்
அரசு பள்ளி ஆசிரியராகும்
வாய்ப்பை இழந்து, தனியார்
பள்ளிகளில் குறைந்த
ஊதியத்தில்
பணியாற்றி வருகின்றனர்.
இந்த சமூக
அநீதி குறித்து அளிக்கப்பட்ட
புகார்களை விசாரித்த மத்திய
சமூகநீதி அமைச்சகம், தமிழக
அரசின் இந்தக்
கொள்கை தன்னிச்சையானது,நியாயமற்றது,சட்டவிரோதமானத
ு, இட ஒதுக்கீட்டுக்
கொள்கைக்கு எதிரானது என்று கண்டனம்
தெரிவித்திருக்கிறது.
அதுமட்டுமின்றி,
இடை நிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்
தேர்வில் இட ஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கான
தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து நிர்ணயிக்க
உடனடியாக
நடவடிக்கை எடுக்கும்படியும்
ஆணையிட்டுள்ளது.
ஆசிரியர்கள் நியமனத்தில்
தமிழக அரசின்
அணுகுமுறை தவறானது என
சென்னை உயர்நீதிமன்றம்
ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.
அண்மையில் அரசினர்
தோட்டத்தில்
அமைக்கப்பட்டுள்ள
பல்துறை உயர்
சிறப்பு மருத்துவமனைக்கான
மருத்துவப் பணியாளர்கள்
நியமனத்தில் கூட
இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத
தமிழக அரசு,
இனியாவது தனது தவறான
அணுகுமுறையை மாற்றிக்கொண்டு அரசு கல்வி,
வேலைவாய்ப்பில்
இடஒதுக்கீட்டை உறுதியாக
கடைபிடிக்க வேண்டும்.
அதன் முதல் கட்டமாக, மத்தியச்
சமூக நீதி அமைச்சகத்தின்
வழிகாட்டுதலின்படி ஆசிரியர்கள்
தகுதித்தேர்வில் இட
ஒதுக்கீட்டு விதிகளை நடைமுறைப்படுத்தி,
இட ஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கான
தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து நிர்ணயிக்க
வேண்டும். அதுமட்டுமின்றி,
ஏற்கனவே நடந்த தகுதித்
தேர்வுகளுக்கும்
இதே முறையை பின்பற்றி,
குறைக்கப்பட்ட
மதிப்பெண்களைப்
பெற்றவர்கள் அனைவரும்
தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க
வேண்டும். அவர்களைக்
கொண்டு, கடந்த
இரு ஆண்டுகளில் ஏற்பட்ட இட
ஒதுக்கீட்டுப்
பிரிவினருக்கான
பின்னடைவு காலி பணியிடங்களை உடனடியாக
நிரப்ப வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ்
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment