Thursday, January 09, 2014

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிப்ரவரி 15ல் மாணவர் சேர்க்கை

நாடெங்கிலும் உள்ள 1,100 கேந்திரிய
வித்யாலயா பள்ளிகளும், ஒன்றாம்
வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையை வரும் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கவுள்ளன.
 சேர்க்கை அறிவிப்பு மற்றும்
வழிகாட்டு விதிமுறைகள்,
வெகு விரைவில், கேந்திரிய
வித்யாலயா சங்கதனால்(sangathan)
வெளியிடப்படும்.அனைத்து கேந்திரிய
வித்யாலயா பள்ளிகளிலும், மொத்தம் 1
லட்சத்திற்கும் மேற்பட்டமாணவர்கள்,
தொடக்க வகுப்பில்
சேர்க்கை பெறுவார்கள் மற்றும்
அவர்களில் சுமார் 20,000 பேர்,
டில்லி பிராந்தியத்தில் உள்ள 80
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்
சேர்க்கைப் பெறுவார்கள்
என்று கூறப்படுகிறது.
டில்லியில் மட்டுமே 60 கேந்திரிய
வித்யாலயா பள்ளிகள்
உள்ளன.உச்சநீதிமன்ற
வழிகாட்டுதலின்படி, மொத்த இடங்களில்
25%, பொருளாதாரத்தில் பின்தங்கிய
மாணவர்களுக்காக ஒதுக்கப்படும்.
ஆனால், அந்த சலுகைக்கான
விண்ணப்பங்கள், இருக்கும்
இடங்களைவிட அதிகரித்தால்,
ஒவ்வொரு பிரிவிலும்
லாட்டரிமுறை பின்பற்றப்படும்.கடந்த
ஆண்டுடன் ஒப்பிடுகையில்,
சேர்க்கை நடைமுறைகளில் எந்த
குறிப்பிடத்தக்க மாற்றங்களும் இந்த
ஆண்டு இருக்காது. சில சிறிய
மாற்றங்களைப் பற்றிய விபரங்கள்
தேவைப்பட்டால் தெரிவிக்கப்படும். 8ம்
வகுப்பு வரை எந்த
சேர்க்கை நுழைவுத் தேர்வும்
நடத்தப்படாது.

No comments:

Post a Comment