Thursday, January 09, 2014

தலைமை ஆசிரியர்களுக்கு நாளை முதல் சிறப்புப் பயிற்சி

கடந்த கல்வி ஆண்டு நடந்த
பொதுத்தேர்வில் 70 சதவீதத்துக்கும்
குறைவான மதிப்பெண் பெற்ற
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில்
அரசு பள்ளி மாணவர்கள் அதிக
தேர்ச்சி மற்றும் முதல் மதிப்பெண் பெற
கல்வித்துறை சார்பில்
பல்வேறு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த
கல்வி ஆண்டில் பொதுத்தேர்வில் 70
சதவீத தேர்ச்சிக்கு குறைவாக எடுத்த
அரசு பள்ளிகள் அடையாளம்
காணப்பட்டு சம்பந்தப்பட்ட
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
சிறப்பு பயிற்சி வழங்க
கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதற்காக, பள்ளிகள் வாரியாக,
அரையாண்டு மற்றும்
காலாண்டு தேர்வு மதிப்பெண்
பட்டியல், கடந்த கல்வி ஆண்டு மதிப்பெண்
பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது:
"ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள
அரசு பள்ளிகளில் பொதுத்தேர்வில் 70
சதவீத தேர்ச்சிக்கும் குறைவாக காட்டிய
பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதில், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்,
மாவட்ட கல்வி அதிகாரிகள்,
குறிப்பிட்ட பாட ஆசிரியர்
ஆகியோருக்கு சிறப்பு பயிற்சி
வழங்கப்படுகிறது.முதல் கட்டமாக
நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி,
சேலம், ஈரோடு ஆகிய
ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த
கல்வி அதிகாரி மற்றும்
தலைமை ஆசிரியர்களுக்கு,
நாளை (10ம் தேதி) ஈரோடு அடுத்த
திண்டல் வேளாளர் கல்லூரியில்
பயற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சியை
பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர்
சபீதா, மாநில
தேர்வுத்துறை அதிகாரிகள்உள்ளிட்ட
கல்வித்துறையினர் பங்கேற்று 70
சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சிக்
கொடுத்த
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
சிறப்பு பயிற்சி மற்றும்
ஆலோசனைகளை வழங்க உள்ளனர்."
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment