Monday, January 13, 2014

தேசிய வருவாய்வழி திறன் தேர்வு விண்ணப்பிக்க ஜன. 20 வரை வாய்ப்பு

தேசிய வருவாய் வழி, திறன்படிப்பு தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஜன.,20 வரை வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய
வருவாய் வழி மற்றும்
திறன்படிப்பு உதவி தொகை திட்டத்தேர்வு பிப்.,22ல் நடக்க உள்ளது. தேர்வு கட்டணமாக ஒருவருக்கு ரூ.50 செலுத்த வேண்டும்.
வெற்றி பெறுபவர்களுக்கு, பிளஸ்2
வரை மாதந்தோறும் ரூ.500
உதவித்தொகை வழங்கப்படும்.தேர்வு
எழுதுபவர்கள், ஜன.,10 வரை, www.tndge.in  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.
தற்போது, விண்ணப்பிக்கும் தேதி, ஜன.,20
வரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தபின்,
பதிவிறக்கம் செய்த விண்ணப்பம் மற்றும்
தேர்வு கட்டணத்துடன், ஜன.,21, 22 ல்
உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட
கல்வி அலுவலங்களிலும், நடுநிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட தொடக்க
கல்வி அலுவலகங்களிலும் ஒப்படைக்க
வேண்டும்.

No comments:

Post a Comment