பள்ளி பேருந்துகளில் பாதுகாப்பு அம்சங்களை கண்காணித்து
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய
பள்ளி பேருந்துகள் அனைத்திலும் ஜிபிஎஸ்குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய
கருவியை பொருத்துவது கட்டாயம் என
சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதன்மூலம்
பள்ளி பேருந்தின் இருப்பிடத்தை அறிய
முடியும். பேருந்தில் பொருத்தப்படும் ஜிபிஎஸ்
அமைப்பு ஆட்டோமொடிவ் ரிசர்ச் அசோசி யேஷன்
ஆப் இந்தியா என்ற அமைப்பால்
அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும்
போக்குவரத்து காவல் துறையால்
அங்கீகரிக்கப்பட்ட வருடாந்திர
பாதுகாப்பு போக்குவரத்து அமைப்பு
அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்
என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த ஜிபிஎஸ் கருவி மூலமாக
பள்ளி பேருந்து எந்த இடத்தில்
இருக்கிறது என்பதை அறிய முடிவதால்
பள்ளி நிர்வாகத்தின்
கண்காணிப்பிலேயே பேருந்தை எப்போ தும்
வைத்திருக்க முடியும். எனவே,
அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள
பேருந்துகளிலும் ஜிபிஎஸ்
கருவியை கட்டாயமாக்க வேண்டும்
என்று சிபிஎஸ் இ அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment