Monday, January 13, 2014

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் 2-ந்தேதி பேரணி: மாவட்ட தலைநகரங்களில் நடக்கிறது

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்
இயக்கங்களில் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் பொதுச்செயலாளர் செ.பாலசந்தர்
கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
தமிழக ஆசிரியர் கூட்டணி,
தமிழ்நாடு தொடக்க-
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்
ஆகிய 7 அமைப்புகளின் சார்பில்
உயர்மட்டக்குழு மற்றும்
பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 7 அம்ச கோரிக்கைகளை தமிழக
அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அடுத்த
மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி தமிழகம்
முழுவதும் மாவட்டத்தலைநகரங்களில்
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்
இயக்கங்களின்
கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில்
பேரணி நடத்துவது என்பது உள்பட
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணி பொதுச்செயலாளர் செ.முத்துசாமி,
தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர்
அ.வின்சென்ட் பால்ராஜ்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி பொதுச்செயலாளர் செ.பாலசந்தர்,
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி பொதுச்செயலாளர் ரா.தாஸ்,
தமிழ்நாடு தொடக்க
நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க
பொதுச்செயலாளர் சி.சேகர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற
பொதுச்செயலாளர் க.மீனாட்சி சுந்தரம் உள்பட
பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment