Tuesday, January 21, 2014

கல்வி விதிமுறை கல்வி அலுவலகம் அருகே மீறல் தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை 'ஜோர்'

மாணவர் சேர்க்கை பணிகளை, ஏப்ரல் மாதம் தான் துவக்க வேண்டும் என்ற,
தமிழக அரசு, கண்டிப்பான உத்தரவை மீறி,
சென்னையில், கல்வித்
துறை அலுவலகம் அருகே உள்ள,
பள்ளியில், நேற்று, எல்.கே.ஜி.,
விண்ணப்பம் வழங்கப்பட்டது,
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில், கல்வித் துறை அலுவலகங்கள் உள்ள
கல்லுாரி சாலையில்,
'குட்ஷெப்பர்டு மெட்ரிகுலேஷன்' என்ற, மேல்நிலைப்
பள்ளியில், நேற்று, 200 இடங்களுக்கான, எல்.கே.ஜி.,
விண்ணப்பம், பிற்பகல், 2:00 மணி முதல்,
வினியோகிக்கப்பட்டது. வெயிலையும்
பொருட்படுத்தாமல், ஆயிரத்திற்கும் மேற்பட்ட
பெற்றோர், சாலையில், நீண்ட துாரம், வரிசையில்
காத்திருந்தனர். இதனால், அந்த பகுதியில்,
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசின்
விதிமீறி, விண்ணப்பம் வழங்கிய விவகாரம்,
மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரின்
கவனத்திற்கு சென்றதும்,
பள்ளி நடவடிக்கை குறித்து, அறிக்கை தர, மெட்ரிக்
பள்ளி ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து, மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர்,
பிச்சை, கூறியதாவது:முன்கூட்டியே, மாணவர்
சேர்க்கையை நடத்த கூடாது என,
பலமுறை வலியுறுத்துகிறோம். ஆனாலும்,
இப்படி நடக்கிறது. 'குட்ஷெப்பர்டு' பள்ளியில்,
முன்கூட்டியே, மாணவர் சேர்க்கை நடக்கக்கூடாது.
உடனடியாக, அனைத்துப் பணிகளையும் நிறுத்த
வேண்டும் என, தெரிவித்து இருக்கிறோம்.
மெட்ரிக் பள்ளி ஆய்வாளரின்
அறிக்கை கிடைத்ததும், மேற்கொண்டு உரிய
நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்
கூறினார்.

No comments:

Post a Comment