Tuesday, January 21, 2014

ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்

திருச்சி: ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று திருச்சியில துவங்கியது.
 கடந்த ஆகஸ்ட் மாதம் மாநில ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் பணிக்கான
எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.
இதில் திருச்சி மாவட்டத்தில்
தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்
சரிபார்க்கும் பணி நேற்று திருச்சியில் துவங்கியது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் சிந்தாமணி இ.ஆர்.,
மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட
கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் என 8 குழுக்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
வரும் 27ம் தேதி வரை இப்பணி நடக்கிறது. மூன்று நாட்கள் இடைநிலை ஆசிரியர் பணிக்கும், 4
நாட்கள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் சான்றிதழ்
சரிபார்ப்பு பணி நடக்கிறது.
தினமும் 200 பேர் வீதம் சான்றிதழ்
சரிபார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment