காமராஜர் பிறந்த நாளையொட்டி திருச்சி மாவட்டத்தில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்படும் இரு பள்ளிகளுக்கு ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் ஜெயஶ்ரீ முரளிதரன்
திங்கள்கிழமை வழங்கினார்.
திங்கள்கிழமை வழங்கினார்.
முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த
நாளை கல்வி வளர்ச்சி நாளாகக்
கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இதற்கான
நிதியில் இருந்து சிறந்த
உள்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்பட்டு வரும்
அரசுப் பள்ளிகளுக்கு, மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.
ஒரு லட்சம், உயர் நிலைப்பள்ளிக்கு ரூ. 75 ஆயிரம்
வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் சிறப்பான
உள்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்பட்டு வரும்
லால்குடி பெருவளப்பூர் அரசு மேல்நிலைப்
பள்ளிக்கும், கண்ணனூர் அரசு உயர்நிலைப்
பள்ளிக்கும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.
இந்தப் பரிசுத் தொகைகளை மாவட்ட ஆட்சியர்
ஜெயசிறீ முரளிதரன் திங்கள்கிழமை வழங்கினார்.
அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.
செல்வகுமார், துணை ஆட்சியர் (பயிற்சி)
கிருஸ்ணன் உன்னி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment