மதுரை:கழிப்பறை வசதி இல்லாததால்,அரசு பள்ளிகளில் மாணவர்கள்
சேர்க்கை குறைந்து வருகிறது.
சேர்க்கை குறைந்து வருகிறது.
அடிப்படை வசதிகள் மேற்கொள்ள,
கல்வி அதிகாரிகள் சிறப்பு கவனம்
செலுத்த வேண்டும்,என, கல்வி அமைச்சர்
வீரமணி தெரிவித்தார்.
மதுரையில் மாவட்ட கல்வி அதிகாரிகள்
கூட்டத்தில், அவர்
பேசியதாவது:கிராமப்புற அரசுப்
பள்ளிகளில்,
கழிப்பறை வசதி இல்லாததால்தான்,
மாணவர் சேர்க்கை பாதிக்கப்படுகிறது.
அடிப்படை வசதிகள் மேற்கொள்ள, அரசு,
பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஆசிரியர்கள்,
கல்வி அதிகாரிகள், கிராமங்களில்
வீடு வீடாக சென்று,
பெற்றோரை சந்தியுங்கள்.
குழந்தைகளை, அரசு பள்ளியில்
சேர்க்காவிட்டால், அந்த
பள்ளியை அரசு மூடிவிடும் என,
எடுத்துக் கூறுங்கள். பெற்றோர்
ஆசிரியர் கழக உறுப்பினர்,
உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்து,
பள்ளிக்குத் தேவையான
வசதிகளை செய்து தர
கோரிக்கை வையுங்கள்.இவ்வாறு,
வீரமணி பேசினார்.
கல்வித்துறை செயலர்
சபிதா பேசியதாவது:மாணவர்
சேர்க்கையில், சி.இ.ஓ.,க்கள்
சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 2014
மார்ச்சுக்குள் அனைத்து பள்ளிகளிலும்
அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.
மாணவர் எண்ணிக்கை மிக குறைவாக
உள்ள பள்ளிகளை அருகாமையில் உள்ள
பள்ளியுடன் இணைக்க, பரிசீலிக்க
வேண்டும். தலைமையாசிரியர் இல்லாத
பள்ளிகள் இருக்கக்
கூடாது.இவ்வாறு சபிதா கூறினார்.
No comments:
Post a Comment