Monday, February 03, 2014

100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விரைவில் மாறும்: சட்டசபையில் ஜெயலலிதா உறுதி

சட்டசபையில் இன்று கவர்ன உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடந்த
விவாதத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–
ஆளுநர்
உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானத்தின் மீதான விவாதத்தில்
கலந்து கொண்டு பல்வேறு கட்சித்
தலைவர்களும், உறுப்பினர்களும்
தங்களது கருத்துகளை எடுத்து வைத்
திருக்கிறார்கள். இந்த ஆளுநர்
உரையில் உள்ள நல்ல அம்சங்களை,
பாராட்ட வேண்டியவைகளைப்
பாராட்டியும், அதில் உள்ள குற்றம்
குறைகளை சுட்டிக்
காட்டி அவற்றை எல்லாம்
தீர்த்து வைக்க ஆவன செய்ய
வேண்டும் என்ற அளவிலேயும்,
இங்கே உறுப்பினர்கள்
தங்களது உரைகளை ஆற்றியிருக்கிறார்கள்.
இந்த அவையில்
கருத்துகளை தெரிவிக்க
வாய்ப்பு இருந்தும் அதனைப்
பயன்படுத்திக் கொள்ளாமல் இந்த
அரசின்
மீது குற்றங்களை மட்டுமே சுமத்த
வேண்டும் என்ற எண்ணத்தில்
அவைக்கு வெளியே இந்த ஆளுநர்
உரை குறித்து மனம் போன
போக்கில் சிலர்
பேசியிருக்கிறார்கள். பொத்தாம்
பொதுவாக
பொறுப்பிலே இருந்தவர்கள்
பொறுப்பிலே இருக்கின்றவர்
பொறுப்பற்ற முறையில்
பேசி இருக்கிறார்கள்.
எங்களை பொறுத்த வரையில்,
மக்களுக்கு நல்லது செய்ய
வேண்டும் என்ற எண்ணத்தில் தான்
திட்டங்களை தீட்டுகிறோம்.
அவ்வாறு தீட்டப்பட்ட திட்டங்கள்
மக்களை சென்றடைகின்றன.
திட்டங்களிலே ஒரு சில குறைகள்
இருக்கலாம். திட்டங்கள் மக்களைச்
சென்றடைவதிலே சில இடங்களில்
சில குறைகள் இருக்கலாம்.
அவற்றைச் சுட்டிக்காட்டினால்,
அவற்றை சரிசெய்ய நாங்கள் தயங்க
மாட்டோம். அதற்காக
ஒட்டுமொத்தமாக குற்றம்
சாட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள
முடியாதது.
எந்த திட்டம் ஆனாலும் எந்த செயல்
ஆனாலும் நல்லதைக்
காண்பதென்றாலும் காணலாம்.
கெட்டதைக் காண்பதென்றாலும்
காணலாம். நாணயத்தின்
இரு பக்கங்களைப் போன்றது தான்
ஒவ்வொரு செயலிலும் நல்லதும்
கெட்டதும். அவரவர்களுடைய
மனதைப் பொறுத்து நல்லதும்
கெட்டதும் தெரியும்.
இங்கே பேசியவர்களில் சிலர்
அரசு இயந்திரத்தில் உள்ள சில
குறைகளை சுட்டிக்
காட்டினார்கள். அவர்கள்
அவற்றை குற்றங்களாக,
குற்றச்சாட்டுகளாக எடுத்துக்
கூறவில்லை. ஆனால், ஒரு சிலர்
குறைகளையும், குற்றங்களாக
சித்தரித்தனர்.
இதை, ஓர் உதாரணத்தின் மூலம்
நான் சுட்டிக் காட்ட
விரும்புகிறேன். +2 படிக்கும்
மாணவி நூற்றுக்கு நூறு பெற
வேண்டும் என்ற எண்ணத்தில்
படிக்கிறார். அவளுடைய
பெற்றோரும் அந்த மாணவியின்
நலனில் அக்கறை உள்ளோரும்
அதைத் தான் விரும்புவார்கள்.
ஒரு வேளை அந்த மாணவி 96
மதிப்பெண் பெற்றால் கூட
நூற்றுக்கு நூறு வாங்கும்,
திறமை இருந்தும் 4 மதிப்பெண்கள்
குறைந்துவிட்டதே என்ற
ஆதங்கம்தான் அவர்களிடம்
வெளிப்படும். எஞ்சிய 4
மதிப்பெண்களை வரும்
காலங்களில் பெற்று விட
வேண்டும் என்ற துடிப்பு தான்
அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு.
இதேபோன்று தான்
இங்கே குறைகளை சுட்டிக்
காட்டியவர்கள் தங்கள்
கருத்துகளை எடுத்துரைத்து இருக்கிறார்கள்
என நான் கருதுகிறேன். ஆனால்,
அதே நேரத்தில் அந்த மாணவியின்
நலனில் அக்கறை இல்லாதவர்கள் 96
மதிப்பெண் என்ன பெரிய
மதிப்பெண்?
நூற்றுக்கு குறைவாக பெற்றால்
96 மதிப்பெண்ணும் ஒன்று தான், 40
மதிப்பெண்ணும் ஒன்று தான்
என்று தங்கள் பொறாமையை,
அழுக்காறை,
ஆற்றாமையை வெளிப்படுத்துவார்கள்.
இல்லை என்றால் “சுலபமாக
கேட்கப்பட்ட
கேள்விகளுக்கு நூற்றுக்கு நூறு வாங்கியிருக்க
வேண்டும். 96 மதிப்பெண்
என்பது குறைவு தான்”
என்று கூறி, அந்த மாணவியின்
சாதனையை சிறுமைபடுத்துவார்கள்.
இவர்களைப் போன்றவர்கள்தான், இந்த
அரசின் திட்டங்கள் குறித்தும்,
அவற்றை செயல்படுத்தும் விதம்
குறித்தும், நியாயமற்ற
குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்கள்.
நிறைகளையும் குறைகளையும்
ஆராய்ந்து பார்த்து, அவற்றில்
மிகுதியாக
இருப்பவை எவை என்பதைத்
தெரிந்து அதன் பிறகு தெளிவான
முடிவுக்கு வர வேண்டும்
என்கிறார் திருவள்ளுவர்.
1961 ஆம் ஆண்டு,
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின்
நிறைவுக் கூட்டம்.
அடுத்து தேர்தல் நடைபெற
இருந்தது. புதிய உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவை புதிதாக
அமைக்கப்பட வேண்டும். இந்த
நிறைவுக் கூட்டத்தில் அமைச்சர்
சி.சுப்ரமணியம்
மக்களவை தேர்தலில் நிற்கப்
போகிறார் என்பதைத் தெரிந்து,
அவரை வாழ்த்தி உறுப்பினர்கள்
பேசினார்கள்.
அப்போது எதிர்க்கட்சி வரிசையில்
அமர்ந்திருந்த பேரறிஞர்
அண்ணா சி.சுப்ரமணியை பாராட்டி பேசினார்.
அப்போது, “இன்றைய தினம்,
என்னுடைய கழகத்தைச் சேர்ந்த
உறுப்பினர் கோவிந்த சாமி, நம்
நிதி அமைச்சராகவும், காங்கிரஸ்
கட்சி முக்கியஸ்தராகவும்,
இன்றைய தினம் சட்ட சபையின்
நடவடிக்கைகளை நடத்திச் செல்லும்
தலைவராகவும் அமர்ந்து நல்ல
பணி ஆற்றிக் கொண்டு வருகிற
கனம் சுப்ரமணியம்
அவர்களை ஏசுநாதருக்கு ஒப்பிட்டுச்
சொன்னார்கள்.
நல்ல
உபதேசங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள்
என்பதை மனதில் வைத்துக்
கொண்டு,
ஏசுநாதருக்கு ஒப்பிட்டுச்
சொன்னதைக் கேட்டு ஒரு கணம்
சந்தோஷம் அடைந்தேன். ஐந்து வருட
காலம் அவர்களோடு பழகிய
நட்புரிமையோடு, கனம்
சுப்ரமணியம் அவர்களோடு,
ஏசுநாதரோடு நாமும் கூடிப்
பழகி இருக்கிறோம்
என்று பெருமைப்பட்டுக்
கொள்ளலாம் என்று மகிழ்ந்தேன்”
என புகழாரம் சூட்டினார்
பேரறிஞர் அண்ணா.
சி.சுப்பிரமணியம்
எழுந்து “சிலுவையில்
அறையாமல் இருக்க வேண்டும்!”
என்று கூறினார்.
அதற்கு அண்ணா அவர்கள் தந்த
அருமையான பதில், என்ன
தெரியுமா?
“மறுகணம் மருட்சி அடைந்தேன்.
ஏனென்றால், ஏசுநாதரின் சீடர்களில்
ஒருவர் அவரைக் காட்டிக்
கொடுத்தது போல், இந்த
ஏசுநாதருக்கு ஆபத்து வராமல்
இருக்க வேண்டும்,
என்று கவலைப்பட்டேன்”
என்று கூறினார். அதாவது, உங்கள்
கட்சிக்காரர்களால் தான் நீங்கள்
எதிர்பார்க்கின்ற
தொந்தரவு ஏற்படலாமே தவிர,
எங்களால் அல்ல
என்பதை அவ்வளவு அழகாக,
நகைச்சுவையுடன் பதில்
அளித்தார் பேரறிஞர்
அண்ணா அவர்கள்.
நாணயத்தின்
ஒரு பக்கத்தை கண்டார் சி.எஸ்.
அவர்கள். அதன் மறு பக்கம் கண்டார்
பேரறிஞர் அண்ணா அவர்கள்.
எனவே, எல்லாவற்றிலும் இருக்கும்
இரு பக்கங்களில், ஒன்றை மட்டும்
பாராமல் இரு பக்கமும்
பார்த்து கருத்துகளை தெரிவிப்பது நல்லது என்ற
என் கருத்தை இங்கு நான்
பதிவு செய்ய விரும்புகிறேன்.
எனது தலைமையிலான அரசின்
மீது புழுதிவாரி இறைக்க
வேண்டுமே என்பதற்காக, மக்கள்
மத்தியில் அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக்
கழக ஆட்சிக்கு உள்ள
நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க
வேண்டுமே என்பதற்காக,
நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும்
பார்த்து இந்த அரசின்
மீது குற்றங்களை சில
உறுப்பினர்கள்
சுமத்தி இருக்கிறார்கள்.
மக்கள் நலப்
பணிகளை மேற்கொண்டு வரும்
எனது தலைமையிலான அரசின்
மீது, அரசியல்
காழ்ப்புணர்ச்சி காரணமாக
புழுதிவாரி இறைக்கின்றவர்கள்
பக்கம் மக்கள் இல்லை. அவர்களும்
மக்கள் பக்கம் இல்லை. பேரறிஞர்
அண்ணா அவர்கள்
குறிப்பிட்டது போல,
அவர்களது வீழ்ச்சிக்கு அவர்களது அழிவுக்கு,
அவர்களது கட்சிக்காரர்கள் தான்
காரணமாக இருப்பார்கள்.
அவர்களது குடும்ப உறுப்பினர்கள்
கூட காரணமாக இருக்கலாம்.
எங்களைப் பொறுத்த வரையில்,
எவ்வித தடுமாற்றமும் இல்லாமல்
இருக்கிறோம். ஏனெனில், மக்கள்
நலத்
திட்டங்களை செயல்படுத்துகின்ற
எங்கள் பக்கம் மக்கள் இருக்கிறார்கள்.
மக்களின் பக்கம் நாங்கள்
இருக்கிறோம்.
இந்த ஆளுநர்
உரை குறித்து தெரிவிக்கப்பட்ட
எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர் வமான
கருத்துகள் நிச்சயம் கவனத்தில்
எடுத்துக் கொள்ளப்படும்
என்பதையும்,
எதிர்க்கட்சி உறுப்பினர்களால்
சுட்டிக் காட்டப்பட்டுள்ள
குறைகளில்
உண்மை இருக்குமானால்
அவை நிச்சயம் களையப்படும்
என்பதையும் நான் முதலில்
தெளிவுபடுத்திக் கொள்ள
விரும்புகிறேன்.
எனது தலைமையிலான அரசைப்
பொறுத்த வரையில், பயனற்ற
இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்ற
வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
நான் எதிர்க்கட்சித் தலைவராக
இருந்த போது பயனற்ற
இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்களை வித்தை காட்டி
குழந்தையை ஏமாற்றுபவர்களோடு ஒப்பிட்டு இதே சட்டமன்றத்தில்
பேசினேன்.
இதைப் புரிந்து கொண்ட மக்கள்,
2011 ஆம்
ஆண்டு அவ்வாறு ஏமாற்றியவர்களை தூக்கி எறிந்தார்கள்.
மக்கள் வாழ்வில் வளம் பெற
வேண்டுமென்றால், மாநிலம்
செழிக்க வேண்டுமென்றால், மனித
வள வளர்ச்சியில் அதிக
அக்கறை செலுத்த வேண்டும். இந்த
கொள்கையைத்தான்
எனது அரசு பின்பற்றி வருகிறது.
எனவே தான், எதிர்கால
சந்ததியினருக்கு பயன்தரக் கூடிய
கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய
இரண்டுக்கும் நான் முக்கியத்துவம்
அளித்து வருகிறேன்.
கல்வியே, சமூக, பொருளாதார
முன்னேற்றத்திற்கு வழிகோலும்
என்பதால், அனைத்துத்
தரப்பு மக்களும், குறிப்பாக,
ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட,
ஒதுக்கப்பட்ட,
சமூக மற்றும் பொருளா தாரத்தில்
பின்தங்கிய வகுப்பினர்
கல்வி அறிவை பெறும்
வகையிலான திட்டங்கள்
எனது அரசால்
செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நடப்பு நிதியாண்டில், பள்ளிக்
கல்விக்கென 16,965 கோடியே 37
லட்சம் ரூபாய்
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
2010-2011 ஆம் ஆண்டு, முந்தைய
மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில்
பள்ளிக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட
தொகை 11,274 கோடியே 75 லட்சம்
ரூபாய் ஆகும். அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில்
பயிலும் மாணவ மாணவியருக்கு.
விலையில்லா பாடப் புத்தகங்கள்,
நோட்டுப் புத்தகங்கள்,
நான்கு இணை சீருடைகள், புத்தகப்
பைகள், காலணிகள், கணித
உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ்
மற்றும் வண்ணப் பென்சில்கள்,
புவியியல் வரைபடப் புத்தகங்கள்
வழங்கப்பட்டு வருகின்றன.
ஒன்று முதல் பன்னிரெண்டாம்
வகுப்பு வரை பயிலும் மாணவ
மாணவியருக்கு,
கட்டணமில்லா பேருந்து பயண
அட்டைகள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர, மேல்நிலைப்
பள்ளிகளில் பயிலும் மாணவ,
மாணவியர் குறித்த நேரத்தில்
பள்ளி செல்ல வசதியாக
விலையில்லா மிதி வண்டிகள்
வழங்கப்படுகின்றன.
மடிக்கணினிகளும்
வழங்கப்படுகின்றன.
இடை நிற்றலைக் குறைக்கும்
பொருட்டு, அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10
ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம்
வகுப்பு பயிலும் மாணவ
மாணவியருக்கு தலா 1,500
ரூபாயும், 12 ஆம்
வகுப்பு பயிலும் மாணவ
மாணவியருக்கு தலா 2,000
ரூபாயும் கல்வி ஊக்கத்
தொகையாக வழங்கப்படுகிறது.
இந்தத்
தொகை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும்
அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்
முதலீடு செய்யப்பட்டு, மாணவ
மாணவியர் மேல்நிலைக்
கல்வியை முடித்தவுடன்
அவர்களுக்கு வழங்கப் படுகிறது.
நடப்பாண்டில் மட்டும் இந்தத்
திட்டத்தின்மூலம் கிட்டத்தட்ட 23 லட்சம்
மாணவ, மாணவியர் பயன்
அடைந்துள்ளனர்.
வருவாய் ஈட்டும்
பெற்றோரை இழக்க நேரிடும்
அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் பயிலும் மாணவ
மாணவியரின்
கல்வி எவ்விதத்திலும்
பாதிக்கப்படக் கூடாது என்பதைக்
கருத்தில் கொண்டு, அவர்களின்
பெயர்களில் 50,000 ரூபாய் பொதுத்
துறை நிறுவனத்தில்
வைப்பு நிதியாக
செலுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் கடந்த
இரண்டரை ஆண்டுகளில் 1,080
மாணவ மாணவியர் பயன்
அடைந்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மற்றும்
பன்னிரண்டாம் வகுப்பு முடித்துச்
செல்லும் மாணவ மாணவியர்
தங்களது கல்வித்
தகுதியை பதிவு செய்வதற்காக
வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்குச்
சென்று அலைவதை தவிர்க்கும்
வகையில், இந்தப்
வேலைவாய்ப்பு பதிவு முறையை பள்ளிகளிலேயே நாங்கள்
அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
இதேபோன்று சாதி சான்றிதழ்,
இருப்பிடச் சான்றிதழ், வருவாய்
சான்றிதழ் ஆகியவற்றையும்
சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்
இடமிருந்து பள்ளித்
தலைமை ஆசிரியர்
பெற்று மாணவ,
மாணவியருக்கு வழங்கும்
முறையும்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவ, மாணவியர் மன
அழுத்தமின்றி,
தேர்வு பயமின்றி மகிழ்ச்சியுடன்
கல்வி கற்க ஏதுவாக, முப்பருவ
முறை திட்டம் ஒன்று முதல்
ஒன்பதாம்
வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த முறையில்
ஒவ்வொரு பருவத்திற்கும்
ஒரு பாடநூல் வழங்கப்படுவதால்,
மாணவ மாணவியரின்
கடுமையான புத்தகச்
சுமை குறைக்கப்பட்டு உள்ளது.
மாணவர்களது படைப்புச்
சிந்தனை மற்றும்
திறன்களை வளர்க்கும்
செயல்பாடுகள் பாடநூல்களில்
சேர்க்கப்பட் டுள்ளன.
உயர் மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் பயிலும் மாணவ
மாணவியரின் மன
அழுத்தத்தை குறைக்கும்
பொருட்டு, நகரும்
ஆலோசனை மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம்,
இதுவரை 46,794 குழந்தைகள்
பயனடைந்துள்ளனர்.
மாணவர்களது ஒருமுகத்
தன்மையை மேம்படுத்துதல்,
பகுப்பாய்வுத் திறன் மற்றும்
பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்
திறனை அதிகரித்தல்
ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு,
அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் பயிலும் மாணவ–
மாணவியருக்கு சதுரங்க
விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு,
இதற்கான போட்டிகளில் 11 லட்சத்து,
25 ஆயிரத்து 628 மாணவ மாணவியர்
பங்கு பெற்றுள்ளனர்.
தங்களுடைய குழந்தைகள் ஆங்கில
மொழியை கற்க வேண்டும் என்ற
ஆர்வம்
பெற்றோர்களிடையே இருப்பதால்,
கூடுதல் செலவையும்
பொருட்படுத்தாமல் ஆங்கில
வழி கல்வியினை போதிக்கும்
தனியார் பள்ளிகளில் தங்கள்
குழந்தைகளை சேர்க்க வேண்டும்
என்ற எண்ணம்
அவர்களிடையே மேலோங்கி நிற்கிறது.
ஏழை, எளிய பெற்றோர்களின்
நிதிச் சுமையினை குறைக்கும்
வகையிலும்; ஆங்கில மொழியில்
கல்வி கற்க வேண்டும் என்ற
எண்ணமும், அதற்குரிய ஆற்றலும்
உள்ள குழந்தைகளுக்கு அதற்கான
வாய்ப்பை அரசு பள்ளிகளிலேயே ஏற்படுத்தித்
தர வேண்டும் என்ற நோக்கத்துடன்,
கடந்த ஆண்டு சில பள்ளிகளில்
ஆங்கில
வழிப்பிரிவு தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டு 6,594 பள்ளிகளில்
ஒன்றாம் மற்றும் 6 ஆம்
வகுப்புகளில் ஆங்கில வழிப்
பிரிவுகள் தொடங்கப் பட்டுள்ளன.
இது தவிர ஆங்கில பேச்சாற்றல்
பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இந்த அரசின்
நடவடிக்கைமீது அவதூறு பரப்ப
வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர்
இதை குறை கூறி வருகின்றனர்.
ஆனால்,
அவ்வாறு குறை கூறுவோர்
தங்கள் பிள்ளைகளை தமிழ்
மொழி வழிக் கல்வியில் படிக்க
வைத்தார்களா? தி.மு.க.வின்
சட்டமன்றக் கட்சித் தலைவர் மு.க.
ஸ்டாலின்,
தனது பிள்ளைகளை தமிழ்
மொழி வழிக் கல்வியில் படிக்க
வைத்தாரா? இல்லையே!
அவர்களுடைய குடும்ப
உறுப்பினர்கள் வைத்திருக்கும்
பள்ளிகளிலாவது தமிழ்
மொழி வழிக்
கல்வி பயிற்றுவிக்கப்படுகிறதா என்றால்
அதுவும் இல்லை.
பள்ளிகளின் பெயர்கள் கூட
ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன.
“துர்காவதி கல்வி அறக்கட்டளை”
என்ற அமைப்பு, சென்னை-29,
மேத்தா நகர்,
ராஜேஸ்வரி தெருவில் சன்ஷைன்
அகாடமி மெட்ரிகுலேஷன்
மேல்நிலைப் பள்ளி என்ற
பள்ளியை இயக்கி வருகிறது.
இந்தப் பள்ளியின் இயக்குநர்
மு.க.ஸ்டாலினின் மகள்
செந்தாமரை சபரீசன்.
மு.க.ஸ்டாலினின் மருமகள்
கிருத்திகா உதயநிதியும் இந்த
அறக்கட்டளையில் உறுப்பினராக
இருக்கிறார். இங்கு என்ன
தமிழ்வழிக்
கல்வி போதிக்கப்படுகிறதா?
இதேபோன்று, சென்னை,
வேளச்சேரி, டாக்டர் சீதாபதி நகர்,
ராணி தெருவில், சன்ஷைன்
மாண்டிசோரி மழலையர் மற்றும்
தொடக்கப் பள்ளியும்,
மடிப்பாக்கத்தில் சன்சைன்
சென்னை சீனியர்
செகன்ட்ரி ஸ்கூல்
இயங்கி வருகின்றன. இந்த
இரண்டு பள்ளிகளுக்கும்
இயக்குநராக இருப்பவர்,
மு.க.ஸ்டாலினின் மகள்
செந்தாமரை சபரீசன். இங்கு ஆங்கில
வழிக் கல்வி மாத்திரம் இல்லை.
இந்தியும் கற்றுக்
கொடுக்கப்படுகிறது. மழலையர்
வகுப்பிற்கான ஆண்டுக் கட்டணம்
9,000 ரூபாய். 11 மற்றும் 12 ஆம்
வகுப்புகளுக்கான கட்டணம் 15,400
ரூபாய்.
தனியார் பள்ளிகள் எல்லாம்
இதேபோன்று ஆங்கில
மொழி வழியில்
வகுப்புகளை நடத்தி அதிக கட்டணம்
வசூலிக்கின்றன. எனவேதான்,
கட்டணம் ஏதும் செலுத்தாமல்
ஏழை எளிய மக்கள் பயன் பெற
வேண்டும் என்பதற்காகத்தான், 6,594
அரசு பள்ளிகளில், ஒரு பிரிவில்
ஆங்கில வழிக்
கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
மாணவ–மாணவியர் தரமான
கல்வியை பெற வேண்டுமெனில்
தகுதி வாய்ந்த ஆசிரியர்கள்
அவசியம் என்பதைக் கருத்தில்
கொண்டு, கடந்த இரண்டே முக்கால்
ஆண்டுகளில் 68,481 ஆசிரியர்
பணியிடங்களை நிரப்ப நான்
உத்தரவிட்டுள்ளேன். இதுநாள்
வரை 51,757 ஆசிரியர்கள்
பணியமர்த்தப் பட்டு உள்ளனர். இந்த
பணி நியமனங்களில் இட
ஒதுக்கீடு முற்றிலும்
பின்பற்றப்பட்டது என்பதையும் நான்
இங்கே பதிவு செய்ய
விரும்புகிறேன். ஒரே நாளில்
20,920
ஆசிரியர்களுக்கு பணி நியமன
ஆணைகளை வழங்கி சாதனை புரிந்த
அரசு எனது தலைமையிலான
அரசு என்பதை இந்த நேரத்தில்
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன். ஆசிரியர் அல்லாத
பணியிடங்களை பொறுத்த
வரையில் இதுவரை, 19,673
பணியிடங் களுக்கு என்னால்
ஒப்புதல் அளிக்கப்பட்டு 10,220
பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.
பள்ளிகளின்
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்
நோக்குடன், நடப்பு நிதியாண்டில்
மட்டும் கிட்டத்தட்ட 366 கோடி ரூபாய்
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப புதிய தொடக்கப்
பள்ளிகளை ஆரம்பித்தல், தொடக்கப்
பள்ளிகளை நடுநிலைப்
பள்ளிகளாகவும், நடுநிலைப்
பள்ளிகளை உயர் நிலைப்
பள்ளிகளாகவும், உயர் நிலைப்
பள்ளிகளை மேல்நிலைப்
பள்ளிகளாகவும் தரம் உயர்த்துதல்
போன்ற
நடவடிக்கைகளை எனது தலைமையிலான
அரசு எடுத்து வருகிறது. 300-
க்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள
இடத்தில் ஒரு கிலோ மீட்டர்
சுற்றுவட்டத்தில் தொடக்கப்
பள்ளிகள் இருக்க வேண்டும் என்ற
அடிப்படையில் 54 புதிய தொடக்கப்
பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனது தலைமையிலான
அரசு பொறுப்பேற்றதிலிருந்து,
1,125 பள்ளிகள் தரம்
உயர்த்தப்பட்டுள்ளன. பத்தாம்
வகுப்பு மற்றும் பன்னிரண்டாம்
வகுப்பில் தோல்வியுறும் மாணவ
மாணவிகள்
அதே ஆண்டிலேயே உயர்
கல்வியை தொடர ஏதுவாக,
தேர்ச்சி பெறாத பாடங்களின்
எண்ணிக்கையை கணக்கில்
கொள்ளாமல்,
அனைத்து பாடங்களையும் ஜூன்
அல்லது ஜூலை மாதங்களில்
உடனடித் தேர்வு எழுத
அனுமதித்தல், புகைப்படம்,
இருபரிமாணப் பட்டக்
குறியீடு மற்றும் கூடுதல் ரகசிய
குறியீடு ஆகியவற்றுடன் கூடிய
பொதுத் தேர்வுக்கான
சான்றிதழ்கள் வழங்குதல் என
பல்வேறு புதுமையான
நடவடிக்கைகள்
எனது தலைமையிலான அரசால்
எடுக்கப்பட்டு உள்ளன.
பள்ளிக் கல்வியில் இவ்வாறு பல
புதிய
திட்டங்களை செயல்படுத்தி வருவதன்
காரணமாகவும்,
மேல்நிலை வகுப்புகளில்
இடை நிற்றலைக் குறைக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டதன்
காரணமாகவும், பத்தாம்
வகுப்பு பயின்றவர்களின்
எண்ணிக்கை கணிசமாக
உயர்ந்துள்ளது. 2010-2011 ஆம்
ஆண்டு 8 லட்சத்து 38 ஆயிரத்து 165
என்று இருந்த பத்தாம்
வகுப்பு மாணவ மாணவியரின்
எண்ணிக்கை,
2013–2014 ஆம் ஆண்டு 11 லட்சத்து 40
ஆயிரமாக உயர்ந்துள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பை பொறுத்த
வரையில், 2010-2011 ஆம் ஆண்டு 7
லட்சத்து 16 ஆயிரத்து 543
என்று இருந்த எண்ணிக்கை;
2013-2014 ஆம் ஆண்டில் 8 லட்சத்து 40
ஆயிரமாக உயர்ந்துள்ளது.
தேர்ச்சி விகிதத்தை எடுத்துக்
கொண்டால், 2011 ஆம்
ஆண்டு நடைபெற்ற பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வில் 85.3
விழுக்காடு என்றிருந்த
தேர்ச்சி விகிதம், 2013 ஆம் ஆண்டு 89
விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இதே போன்று, 2011 ஆம்
ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம்
வகுப்பு பொதுத் தேர்வில் 85.9
விழுக்காடாக இருந்த
தேர்ச்சி விகிதம், 2013 ஆம்
ஆண்டு 88.1 விழுக்காடாக
உயர்ந்துள்ளது.
உயர் கல்வியை எடுத்துக்
கொண்டால், திருச்சிராப்பள்ளி,
தேனி, தர்மபுரி மற்றும் தஞ்சாவூர்
மாவட்டங்களில் புதிதாக
அரசு பொறியியல் கல்லூரிகள்
துவக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும்
இதுவரை 11
பலவகை தொழில்நுட்பக்
கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. 24
பல்கலைக்கழக உறுப்புக்
கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகள் மற்றும் 12
அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில்
தேசிய சட்டப்
பள்ளி துவங்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளின்
உட்கட்டமைப்பு வசதிக்கென 100
கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு,
அதற்கான பணிகள்
நடைபெற்று வருகின்றன.
கல்லூரிகளில் காலியாக உள்ள
உதவிப் பேராசிரியர்
பணியிடங்கள், இட ஒதுக்கீட்டின்
அடிப்படையில்
நிரப்பப்பட்டு வருகின்றன.
மொத்தத்தில் ஒரு கல்விப்
புரட்சியை தமிழ்நாட்டில்
ஏற்படுத்தி இருக்கிறோம்.
விரைவில் 100
விழுக்காடு கல்வி அறிவு பெற்ற
மாநிலமாக தமிழகம் திகழும்
என்பதை மிகுந்த பெருமிதத்துடன்
இந்த மாமன்றத்திற்கு நான்
தெரிவித்துக் கொள்ள
கடமைபட்டு இருக்கிறேன்.
மக்களின் வாழ்வு வளம் பெற
கல்விக்கு இணையாக
உள்ளது மக்கள் நல்வாழ்வு. தரமான
மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்
பணியாளர்கள் காலத்தே நியமனம்
செய்யப் பட வேண்டும் என்பதன்
அடிப்படையில்,
இந்தியா விலேயே முதலாவதாக
மருத்துவப் பணியாளர்
தேர்வு வாரியம் அமைக்கப்
பட்டுள்ளது. இதன்மூலம் மட்டும் 2334
மருத்துவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு, இட
ஒதுக்கீட்டின் அடிப்படையில்
பணி நியமனம்
செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மருத்துவப் பணியாளர்
தேர்வு வாரியம்
அமைக்கப்படுவதற்கு முன், 2,027
மருத்துவர்கள் இட ஒதுக்கீட்டின்
அடிப்படையில் பணி நியமனம்
செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆக
மொத்தம், 4,361 மருத்துவர்கள்
காலமுறை ஊதியத்தில்
நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள்.
இதேபோன்று, 912 மருத்துவம்
சார்ந்த பணியாளர்களும் நியமனம்
செய்யப்பட்டுள்ளனர்.
ஏழை எளிய, நலிந்த மக்கள்
பயன்பெறும் வண்ணம்,
முதலமைச்சரின் விரிவான
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தப் புதிய காப்பீட்டுத்
திட்டத்தின்கீழ்,
ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு ஒரு லட்சம்
ரூபாய் வீதம், 4 ஆண்டுகளுக்கு 4
லட்சம் ரூபாய் வரையும், சில
குறிப்பிட்ட
சிகிச்சை முறைகளுக்கு ஆண்டிற்கு 1½
லட்சம் ரூபாய் வரையும்
வழங்கப்படுகிறது.
ஒரு குடும்பத்தில் ஒருவர் மாற்றுத்
திறனாளியாக இருந்தால்,
அக்குடும்பத்தினர் வருமான
வரம்பின்றி, இந்தத் திட்டத்தில்
சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் வாழும்
இலங்கைத் தமிழர்களுக்கும்
நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தத்
திட்டத்தின்கீழ், இதுவரை 1,256
கோடி ரூபாய் செலவில் 5
லட்சத்து 84 ஆயிரம் ஏழை எளிய
மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
இதில் அரசு மருத்துவமனைகள்
மூலம், 447 கோடி ரூபாய்
செலவில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர்
பயன் அடைந்துள்ளனர். மேலும்,
இந்தத் திட்டத்தில் வரையறுக்கப்பட்ட
தொகைக்கு மேல் செலவு ஏற்படும்
சிறப்பு அறுவை சிகிச்சைகளுக்கான
முழு செலவுத் தொகையை வழங்க
வழிவகை செய்யும் ஏற்பாடாக, 10
கோடி ரூபாய் முதலீட்டில்
சிறப்பு நிதியம்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத்
திட்டத்தின் கீழ் 926 பேர் பயன்
பெற்றுள்ளனர்.
சென்னை ஓமந்தூரார் அரசினர்
தோட்டத்தில், எய்ம்ஸ்
மருத்துவமனைக்கு இணையான
பலதுறை உயர்
சிறப்பு மருத்துவமனை மற்றும்
மருத்துவக்
கல்லூரி அமைக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று, 2000-க்கும் மேற்பட்ட
புற நோயாளிகள்
சிகிச்சை பெறும் சென்னை பல்
மருத்துவக் கல்லூரிக்கென
ஒரு புதிய அடுக்குமாடிக் கட்டடம்
அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, தமிழ்நாடு பல்
மருத்துவமனைக்கு கூடுதல்
கட்டடம் கட்டுவதற்கும், புதிய
பணியிடங்களை தோற்றுவிப்பதற்கும்,
இதனை தரம் உயர்த்துவதற்கும் ஆன
பணிகள் முழு வீச்சில்
நடைபெற்று வருகின்றன.
அரசு ஊழியர்களுக்கான
மருத்துவக் காப்பீட்டுத்
திட்டத்தை எடுத்துக் கொண்டால்,
முந்தைய மைனாரிட்டி தி.மு.க.
ஆட்சியில்
நான்கு ஆண்டுகளுக்கு இரண்டு லட்சம்
ரூபாய் வரை சிகிச்சை பெற
தனியார் காப்பீட்டு நிறுவனத்தின்
மூலம்
வழிவகை செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், 2011-ல், நான்
ஆட்சி பொறுப்பேற்ற பிறகு,
நான்கு ஆண்டுகளுக்கு நான்கு லட்சம்
ரூபாய் வரை சிகிச்சை பெற
வழிவகை செய்ததோடு, தனியார்
காப்பீட்டு நிறுவனத்துடன்
மேற்கொள்ளப்பட்ட
ஒப்பந்தத்தை மாற்றி மத்திய
அரசு நிறுவனத்துடன், அதாவது,
யுனெடெட் இந்தியா இன்சூரன்ஸ்
நிறுவனத்துடன் ஒப்பந்தம்
மேற்கொள்ளவும்
வழிவகை செய்துள்ளேன்.
நகர்ப்புற மக்களுக்கு இணையாக
கிராமப்புற மக்களுக்கும்
மருத்துவ வசதி கிடைக்க
வேண்டும் என்பதன் அடிப்படையில்,
கிராமப் புறங்களில் உள்ள 58 ஆரம்ப
சுகாதார நிலையங்கள் 30
படுக்கை வசதி கொண்ட
மருத்துவமனைகளாக தரம்
உயர்த்தப்பட்டுள்ளன. 42 ஆரம்ப
சுகாதார மையங்களில், தாய் சேய்
நல மையங்கள் 20 கோடி ரூபாய்
செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
அவசர
மகப்பேறு அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கு தேவையான
அனைத்து உபகரணங்களும் அந்த
மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இதுவன்றி, 28 கோடி ரூபாய்
செலவில் புதிதாக 47 ஆரம்ப
சுகாதார நிலையங்கள்
ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 27 மாவட்ட
மருத்துவமனைகளுக்கு சுமார் 13
கோடி ரூபாய் செலவில் புதிய
உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மதுரை மற்றும் சேலம் மருத்துவக்
கல்லூரி மருத்துவமனைகளில்
உள்ள தாய் சேய் நலப்
பிரிவுகளை மேன்மைமிகு யைமங்களாக
மேம்படுத்த ஆணைகள்
பிறப்பிக்கப்பட்டு உள்ளன. எழும்பூர்
மகப்பேறு மருத்துவமனையின்
தாய் சேய் நலப்
பிரிவு மேம்படுத்தப்பட்டு உள்ளது.
இதுதவிர,
அனைத்து அரசு மருத்துவக்
கல்லூரி மருத்துவமனைகளும்
வலுப்படுத்தப்பட்டு உள்ளன. 55
மருத்துவமனைகளில்,
மகப்பேறு தீவிர
சிகிச்சை பிரிவு தொடங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள்
மற்றும் பிரசவித்த தாய்மார்கள்
ஆகியோர் பற்றிய
விவரங்களை பதிவு செய்யும்
கிராம சுகாதார
செவிலியர்களின்
பணியினை மேம்படுத்தும்
வகையில்,
அவர்களுக்கு மடிக்கணினிகள்
வழங்கப்பட்டுள்ளன.
இவையன்றி, கிராமப்புற
மக்களுக்கான மருத்துவ
வசதியை மேலும் மேம்படுத் தும்
வகையில், 100 கோடி ரூபாய்
செலவில் 118 ஆரம்ப சுகாதார
நிலையங்களை புதிதாக
ஏற்படுத்தவும், 77 கோடி ரூபாய்
செலவில் 64 ஆரம்ப சுகாதார
நிலையங்களை 30
படுக்கை வசதிகள் கொண்ட ஆரம்ப
சுகாதார நிலையங்களாக தரம்
உயர்த்தவும் நான்
உத்தரவிட்டுள்ளேன் என்பதைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
கருவுற்ற ஏழைத் தாய்
மார்களுக்கு ஏற்படும் வருமான
இழப்பை ஈடு கட்டும் வகையிலும்,
கர்ப்ப காலத்தில் சத்தான
உணவு உண்டு, நிறைவான
எடையுள்ள
குழந்தையை ஈன்றெடுக்கும்
வகையிலும், இரத்த சோகை மற்றும்
பேறு காலத்திற்குப் பின் ஏற்படும்
நோய்களை தடுக்க வேண்டும்
என்பதன் அடிப்படையிலும், டாக்டர்
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்
திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ்
அளிக்கப்பட்டு வந்த
மகப்பேறு நிதி உதவியை, 6,000/-
ரூபாயிலிருந்து 12,000/-
ரூபாயாக நாங்கள்
உயர்த்தி இருக்கிறோம். கர்ப்ப கால
சேவைகளை அரசு மருத்துவ
நிலையங்களில் பெறும்
போது 4,000 ரூபாய்,
அரசு மருத்துவ நிலையங்களில்
பிரசவம் மேற்கொண்ட பிறகு 4,000
ரூபாய், முத்தடுப்பு ஊசி மற்றும்
போலியோ சொட்டு மருந்து கொடுத்த
பிறகு 4,000 ரூபாய் என மொத்தம்
12,000 ரூபாய்
மகப்பேறு நிதி உதவியாக
வழங்கப்படுகிறது. இதன் மூலம்,
கர்ப்ப கால
சேவைகளை பெறுவதற்கு ஊக்கம்
அளிக்கப்படுவதுடன்,
மருத்துவமனைகளில் பிரசவம்
மேற்கொள்ளப் படுவதும்,
சிசுக்களுக்கு தடுப்பு ஊசி வழங்கப்படுவதும்
உறுதி செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ்,
ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 6
லட்சம் பேர் பயனடைகிறார்கள்.
இதுவரை 1,667 கோடி ரூபாய்
அளவுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்விற்கு எடுக்கப்பட்ட
முன் முயற்சிகள் காரணமாக,
நல்வாழ்வு குறியீடுகள்
வளர்ச்சி அடைந்துள்ளன. 2010 ஆம்
ஆண்டு, 1,000
குழந்தை பிறப்புகளுக்கு 24 என
இருந்த ஒரு வயதிற்குட்பட்ட
குழந்தை இறப்பு விகிதம்,
தற்போது 21 ஆக குறைந்துள்ளது.
2010 ஆம் ஆண்டு, 27 என இருந்த, 5
வயதுக்குட்பட்ட
குழந்தை இறப்பு விகிதம், 2012 ஆம்
ஆண்டு 24 ஆக குறைந்துள்ளது.
அதுபோலவே, 2010 ஆம் ஆண்டு தாய்
இறப்பு விகிதம் 1 லட்சம் உயிருள்ள
பிறப்புகளுக்கு 79 என இருந்தது,
தற்போது 73 ஆக குறைந்துள்ளது.
இப்படி நாட்டின் வளர்ச்
சிக்கு இன்றியமையாததாக
விளங்கும் மக்களின்
ஆரோக்கியத்தை உறுதிப் படுத்த
எண்ணற்ற நடவடிக்
கைகளை எனது தலைமை யிலான
அரசு எடுத்து வருகிறது.
கல்வி மற்றும் நல்வாழ்வு திட்டங்கள்
எதிர்காலத்திற்குத் தான் பயன்
அளிக்கும். நல்ல உடல் நலமுள்ள
கல்வியில் தேர்ந்த
இளைஞர்களை உருவாக்கவும்
மக்களின்
நல்வாழ்வினை உறுதி செய்யவும்
இத்திட்டங்கள் பயன் அளிக்கும்.
அதே நேரத்தில் ஒதுக்கப்பட்ட
மக்களின் நலன் காக்கவும்
எனது தலைமையிலான
அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சமுதாயத்தில் அடித்தளத் தில் உள்ள
மக்களைப் பாதுகாக்க வேண்டும்
என்பதில் நாங்கள் உறுதியாக
உள்ளோம். இதன் அடிப்படையில்,
சமூகப் பாதுகாப்புத்
திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வந்த
ஓய்வூதியத்தை 1,000 ரூபாயாக
உயர்த்தியுள்ளோம். தாய்மார்களின்
நலனைக் கருத்தில் கொண்டு,
விலையில்லா மிக்ஸி, கிரைண்டர்
மற்றும் மின் விசிறி வழங்கும்
திட்டத்தினை அறிமுகப்படுத்தி,
செயல்படுத்தி வருகிறோம்.
இதுவரை 71 லட்சத்திற்கும் மேற்பட்ட
குடும்ப அட்டைதராரர்களுக்கு,
இந்த பொருட்கள் வழங்கப் பட்டுள்ளன.
வெண்மைப்
புரட்சியை ஏற்படுத்தும் வகையில்,
கறவைப் பசுக்கள் மற்றும்
வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 32,052 கறவைப் பசுக்கள்
மற்றும் 14 லட்சத்து 97 ஆயிரத்து 624
வெள்ளாடுகள் வழங்கப்பட்டு உள்ளன.
முதலமைச்சரின் சூரிய மின்
சக்தியுடன் கூடிய
பசுமை வீடு திட்டத்தின்கீழ், 1,80,000
நபர்கள் பயன் அடைந்துள்ளனர்.
ஏழைப் பெண்களுக்கு, 25,000
ரூபாய் திருமண உதவித்
தொகையுடன் 4 கிராம்
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்,
பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த
ஏழைப் பெண்களுக்கு 50,000
ரூபாய் திருமண உதவித்
தொகையுடன், 4 கிராம்
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் 2.86
லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழைப்
பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.
கார்ப்பரேஷன் மூலம் ஏழை எளிய
மக்கள் குறைந்த கட்டணத்தில்,
நிறைவான
சேனல்களை கண்டு களிக்க
வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.
இதே போன்று, மாற்றுத்
திறனாளிகளுக்கென
பல்வேறு திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக, “மாற்றுத்
திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல்
என்ற பிரிவின் கீழ் 2013-ஆம்
ஆண்டிற்கான சிறந்த மாநிலமாக
மத்திய அரசால் தமிழ்நாடு தெரிந்
தெடுக்கப்பட்டு, அதற்கான
விருது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தவறான
பொருளாதாரக்
கொள்கைகளினாலும், தவறான
டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு,
விலை நிர்ணயத்தாலும்,
விலைவாசி உயர்ந்து கொண்டே வருகிறது.
விலைவாசி உயர்வை குறைக்கும்
நடவடிக்கைகளில் மத்திய
அரசு தவறியுள்ளது என்பதை மாண்புமிகு பாரதப்
பிரதமர் அவர்களே ஒப்புக்
கொண்டுள்ளார். அதாவது,
“பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில்
நாங்கள் எதிர்பார்த்த
அளவுக்கு எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இதற்கு முக்கியக் காரணம்
உணவு பொருட்களுக்கான
பணவீக்கம் உயர்ந்தது தான்”
என்று கூறி இருக்கிறார் பாரதப்
பிரதமர்.
விலைவாசியை கட்டுப்படுத்துவது மத்திய
அரசின் நிதிக் கொள்கை மற்றும்
பாரத ரிசர்வ் வங்கியின் பணக்
கொள்கை ஆகியவை தான்.
மத்திய அரசின் விரிவான
பொருளாதாரக் கொள்கை மற்றும்
இதர பொருளாதாரக் கொள்கைகள்
சரி செய்யப் பட்டால்தான்
விலை வாசியை கட்டுப்படுத்த
இயலும். எனினும், மாநில அரசால்
என்னென்ன செய்ய
இயலுமோ அவை அனைத்தையும்,
எனது தலைமையிலான
அரசு செய்து வருகிறது.
விலைவாசியை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும்
வகையில் இந்தியாவில் வேறு எந்த
மாநிலத்திலும் இல்லாத
அளவுக்கு அனைத்து குடும்ப
அட்டைதாரர்களுக்கும் 20
கிலோ விலையில்லா அரிசியை நாங்கள்
மக்களுக்கு வழங்கிக்
கொண்டிருக்கிறோம். வெளிச்
சந்தையில் விற்கப்படும்
பொருட்களின்
விலைகளை கட்டுப்படுத்த
ஏதுவாக, விலை நிலைப்படுத்தும்
நிதியம் ஏற்படுத்தப்பட்டு 100
கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அமுதம் அங்காடிகள்,
கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும்
சிறப்பு அங்காடிகள் மூலமாக
ஒரு கிலோ அரிசி 20 ரூபாய் என்ற
விலையில்
விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது மட்டுமல்லாமல்,
சிறப்பு பொது விநியோகத்
திட்டத்தின்கீழ், ஒரு லிட்டர்
பாமாயில் 25 ரூபாய்க்கும்,
ஒரு கிலோ துவரம் பருப்பு 30
ரூபாய்க்கும்,
ஒரு கிலோ உளுத்தம் பருப்பு 30
ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன.
காய்கறி விலையைக் கட்டுப்படுத்த
நகர்புற பகுதிகளில்
கூட்டுறவு அமைப்புகள்
மூலமும், தோட்டக்கலைத்
துறை மூலமும்
விவசாயிகளையும்,
நுகர்வோரையும் நேரடியாக
இணைக்கக் கூடிய பண்ணைப்
பசுமை நுகர்வோர் கடைகள்
திறக்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய
தாய்மார்களின் நலனைக் கருத்தில்
கொண்டு, சமையல்
எரிவாயு மீதான மதிப்புக்
கூட்டு வரி 1.7.2011 முதல்
எனது தலைமையிலான அரசால்
முழுவதுமாக
ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேறு எந்த மாநிலத்திலும்
இல்லாத அளவுக்கு ஏழை, எளிய
மக்கள் பயன்பெறும் வண்ணம்,
அம்மா உணவகங்கள்,
அனைத்து மாநகராட்சிகளிலும்
திறக்கப்பட்டுள்ளன. இந்த
உணவகங்களில்,
இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல்,
சாம்பார் சாதம்,
கருவேப்பிலை சாதம்,
எலுமிச்சம்பழ சாதம் ஆகியவை 5
ரூபாய்க்கும், தயிர் சாதம் 3
ரூபாய்க்கும்
விற்பனை செய்யப்படுகின்றன.
இது தவிர, “மக்களை நாடி அரசு”
என்பதற்கேற்ப, மக்கள்
குறை தீர்க்கும் அம்மா திட்டம்,
அரசுப் பேருந்துகளில் பயணம்
செய்யும் பயணிகளின் நலனைக்
கருத்தில் கொண்டு, 10
ரூபாய்க்கு 1 லிட்டர் மினரல் வாட்டர்
வழங்கும் அம்மா குடிநீர் திட்டம்,
சென்னை மாநகர மக்களின்
தேவையை நிறைவு செய்யும்
வகையில்,
போக்குவரத்து இணைப்பு இல்லாத
பகுதிகளிலிருந்து அருகிலுள்ள
பேருந்து நிலையம் மற்றும் ரயில்
நிலையத்தை இணைக்கும்
வகையில் சிற்றுந்துகள் அறிமுகம்,
புதிய வழித் தடங்கள் அறிமுகம்,
புதிய பேருந்துகள் அறிமுகம்,
கிறிஸ்தவர்கள் ஜெருசலம் செல்ல
மானியம், இந்துக்கள் மானசரோவர்
மற்றும் முக்திநாத் செல்ல
மானியம், உலமாக்களுக்கான
ஓய்வூதியம் அதிகரிப்பு,
உலமாக்கள்
எண்ணிக்கை அதிகரிப்பு,
வக்ஃபு வாரியத்திற்கு நிதி உதவி என
எண்ணற்ற மக்கள் நலம் பயக்கும்
திட்டங்கள் எனது தலைமையிலான
அரசால்
செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு முதல்– அமைச்சர்
ஜெயலலிதா பேசினார்.

No comments:

Post a Comment