Friday, February 21, 2014

10ம் வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைப்பு: தேர்வு துறை கவனக்குறைவு

தேர்வுத் துறை இணையதளத்தில், 10ம் வகுப்பு, "நாமினல்ரோல்' வெளியிடப்படாததால், இன்று நடக்கவிருந்த, செய்முறை தேர்வு, திடீரென
ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழகத்தில்,
10ம் வகுப்புக்கு, சமச்சீர்கல்வி முறையில்,
அறிவியல்
செய்முறை தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. மார்ச்,
3ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க
உள்ளதால், அதற்கு முன், 10ம்
வகுப்பு செய்முறை தேர்வை முடித்து விடும்
நோக்கில், பிப்., 21ம் தேதி முதல்,
செய்முறை தேர்வை நடத்த, தேர்வுத்
துறை உத்தரவிட்டது.
செய்முறை தேர்வு நடத்துவதற்கான, கண்காணிப்பாளர்
பணிக்கு, வேறு பள்ளிகளில் இருந்து, ஆசிரியர்கள்
ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு, "ட்யூட்டி ஆர்டர்'
வழங்கப்பட்டன. ஆனால், தேர்வுத் துறை,
"நாமினல்ரோல்' வெளியிடவில்லை; இதனால்,
மாணவர்களுக்கு, பதிவு எண் மற்றும் "ஹால்
டிக்கெட்' வழங்க முடியாத, சூழல் உருவாகியது.
இதையடுத்து, 10ம் வகுப்பு செய்முறை தேர்வு,
ஒத்தி வைக்கப்படுவதாக, நேற்று மாலை, கல்வித்
துறை அலுவலர்கள்,
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு,
வாய்மொழி உத்தரவிட்டனர்.
இதுகுறித்து, தலைமை ஆசிரியர் ஒருவர்
கூறியதாவது: இன்று காலை, சேலம் மாவட்டத்தில்,
10ம் வகுப்பு செய்முறை தேர்வு துவங்க
திட்டமிடப்பட்டிருந்தது. தேர்வுக்கு தயாரான
நிலையில், நாமினல் ரோல், கடைசி நேரத்தில், ஆன்
- லைனில் பதிவேற்றம் செய்யப்படலாம் என,
ஆசிரியர்களுக்கு, "ரிலிவிங் ஆர்டர்'
கொடுத்துவிட்டோம். தற்போது, திடீரென,
செய்முறை தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால்,
ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இவ்வாறு,
அவர் கூறினார்.

No comments:

Post a Comment