பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
திருச்சி துவக்கப்பள்ளி ஆசிரியர்கள்
உள்ளிருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
திருச்சி துவக்கப்பள்ளி ஆசிரியர்கள்
உள்ளிருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய
வேண்டும். மத்திய
அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம்
வழங்க வேண்டும். பங்கேற்பு ஓய்வூதிய
திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்
கோரிக்கை அட்டை அணிந்து உள்ளிருப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 16
ஒன்றியங்களைச் சேர்ந்த இரண்டாயிரம்
ஆசிரியர்கள் நேற்று இந்த போராட்டத்தில்
பங்கேற்றனர். போராட்டம் காரணமாக மாணவ,
மாணவிகள் கல்வி கற்பதில்
பாதிப்பு ஏற்பட்டது.
போராட்டத்தின் ஒரு கட்டமாக
இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபடவுள்ளதாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்
கூட்டணி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment