தமிழகம் முழவதும் இன்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்கின்றனர்
என்று, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் தருமபுரி காமராஜ், மாநில துணைச் செயலர் தம்மம்பட்டி வெங்கடாசலம் ஆகியோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது:
மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும், ஆசிரியர்கள் தகுதித் தேர்வு, பங்கேற்பு ஓய்வூதியம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (பிப்.25) தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த 60 ஆயிரம் ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்று உள்ளிருப்புப் போராட்டம் செய்தனர். இதையடுத்து, இன்று ஆசிரியர்கள் அனைவரும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்கின்றனர் என்றனர்
No comments:
Post a Comment