பொதுத்தேர்வில், மாணவர்களுக்கு வழங்கப்படும் எண்கள் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது;
இதனால், காப்பியடித்தல், விடைத்தாள்
மாற்றுவது போன்ற முறைகேடு தடுக்கப்படும்,''
என, முதன்மை கல்வி அலுவலர்
ஆனந்தி தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டத்தில்,
பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான
செய்முறை (பிராக்டிகல்) தேர்வு, வரும் 6ம்
தேதி துவங்குகிறது. இதுகுறித்த
ஆலோசனை கூட்டம், திருப்பூர்
விவேகானந்தா வித்யாலயா பள்ளியில்
நேற்று நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர்
ஆனந்தி தலைமை வகித்து பேசியதாவது:
வரும் 6ம்
தேதி செய்முறை தேர்வுகளை துவக்கி, 20ம்
தேதிக்குள் முடிக்க வேண்டும். எவ்வித
புகாருக்கும் இடமளிக்காமல்,
தேர்வை சிறப்பாக நடத்த வேண்டும்.
மாணவர்களுக்கு எவ்வித இடையூறும்
ஏற்படாத வகையில்,
முன்னேற்பாடுகளை பள்ளி நிர்வாகம்
செய்திருக்க வேண்டும். காலையில்
ஒரு பிரிவு, மதியம் ஒரு பிரிவு என்ற
அடிப்படையில், செய்முறை தேர்வை நடத்த
வேண்டும்.
வரும் பொதுத்தேர்வில், செய்முறை மற்றும்
பாடத்தேர்வில், தேர்வு வரிசை எண்களில்
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு,
ஒரே இலக்க அடிப்படையில் எண்கள்
வரிசையாக வரும்போது, ஒரே பள்ளி மாணவ,
மாணவியர்
அடுத்தடுத்து அமர்ந்து தேர்வு எழுதுகின்றனர்
. காப்பியடிப்பது, விடைத்தாள்
மாற்றுவது போன்ற முறைகேடு நடக்கிறது.
இதை தவிர்க்கும் வகையில்,
இம்முறை வரிசை எண்களில் மாற்றம்
கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு பகுதியில்
உள்ள
ஐந்து அல்லது ஆறு பள்ளிகளை கலந்து,
வரிசை எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனால், ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்கள்
வரிசையாக அமர வாய்ப்பின்றி, பல
பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள்
கலந்து அமர்ந்து தேர்வு எழுதுவர்.
அறிமுகமற்ற மாணவர்கள்
அடுத்தடுத்து அமரும்போது,
முறைகேடு தடுக்கப்படும்.இவ்வாறு, அவர்
பேசினார்.
No comments:
Post a Comment