Saturday, February 01, 2014

D.A HIKE 10% | உறுதியானது 10% அகவிலைப்படிஉயர்வு... விரைவில் அறிவிக்கிறது மத்திய அரசு....90% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100% அகவிலைப்படி பெறுவார்கள்

2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக்
குறியீட்டு எண் 31.01.2014அன்று வெளியிடப்பட்டது.

இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10%
அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90%
அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள்
01.01.2014 முதல் 100%
அகவிலைப்படி பெறுவார்கள்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில்
மத்திய
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி
உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில
அரசும்
தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை
உயர்த்தி வழங்கும்.
கடைசியாக கடந்த 2013 ஜூலை முதல் 80
சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 10
சதவீதம் அதிகரித்து தற்போது 90 சதவீதமாக
இரு அரசு ஊழியர்களும்
பெற்று வருகின்றனர். இனி 2013 டிசம்பர்மாத
அடிப்படையில் அகவிலைப் படியை அறிவிக்க
வேண்டும்.
இதன்படிடிசம்பர்இறுதியில், நுகர்வோர்
விலைக்குறியீட்டு எண் அடிப்படையில்,
மத்திய அரசு 10 சதவீத
அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தொகையை ஜனவரி முதல் நிலுவையாக
வைத்து வழங்கும். இதையடுத்து மாநில
அரசும் அகவிலைப்படி உயர்வை மார்ச்சில்
அறிவித்து, ஏப்ரலில் 3 மாத நிலுவையுடன்
வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment