எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான தர வரிசைப்பட்டியல், அடுத்த மாதம், 12ம்
தேதி வெளியிடப்படுகிறது.
தேதி வெளியிடப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
படிப்புகளில் சேர, இதுவரை, 27
ஆயிரம் பேர்
விண்ணப்பம் பெற்றுஉள்ளனர். தமிழகத்தில்,
19 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2,172
எம்.பி.பி.எஸ்., இடங்களும்; சென்னை அரசு பல்
மருத்துவக் கல்லுாரியில், 85 பி.டி.எஸ்.,
இடங்களும் உள்ளன. இந்த படிப்பு களுக்கான,
மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள்
வினியோகம், மே 14ல் துவங்கியது. இதுவரை,
27,999 பேர் விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்;
இதில், 2,550 விண்ணப்பங்களை, மாணவர்கள்
சமர்பித்து உள்ளனர். விண்ணப்பங்கள் பெற,
இன்னும் ஐந்து நாட்களே (கடைசி நாள், மே 30)
உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஜூன்
2ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
விடைத்தாள் மறுமதிப்பீட்டு விவரங்களை தர,
மாணவர்களுக்கு, ஜூன் 10ம்
தேதி வரை அவகாசம் தரப்பட்டு, ஜூன் 12ம்
தேதி, தர வரிசை பட்டியலை வெளியிட,
மருத்துவக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட
கலந்தாய்வு, ஜூன் 18ல் தொடங்கும் என,
தெரிகிறது.
No comments:
Post a Comment