பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்த
மாவட்டங்களின், முதன்மை கல்வி அதிகாரிகள்(சி.இ.ஓ.,) மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்மாவட்டங்களின், முதன்மை கல்வி அதிகாரிகள்(சி.இ.ஓ.,) மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.
குறித்து ஆலோசிப்பதற்காக, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள் கூட்டம், நாளை (மே 27 ல்), பள்ளிக்கல்வி இயக்குநர்
தலைமையில், சென்னையில் நடக்க
இருக்கிறது. இதில், ஐந்து ஆண்டுகளில்,
மாவட்ட வாரியாக, தேர்ச்சி சதவீதத்தை ஆய்வு செய்ய உள்ளனர்.
கடந்த ஆண்டுகளில், நல்ல தேர்ச்சி விகிதம் இருந்தது, இக்கல்வி ஆண்டில்,
தேர்ச்சி குறைவாக காட்டிய, சி.இ.ஓ.,க்கள்
மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என,
தெரிகிறது.
மேலும், அரசு பள்ளிகளில்,
தேர்ச்சியை அதிகரிக்க, தேவையான
பயிற்சி திட்டங்கள் குறித்தும்,
மாணவர்களுக்கு அரசு வழங்கும், பாட
புத்தகங்கள், சீருடை போன்ற இலவச திட்டங்கள்
எந்தளவிற்கு சென்றடைந்துள்ளது என்பது குறித்தும்,
ஆய்வு செய்ய உள்ளனர்.இதனால்,
தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்களின்,
சி.இ.ஓ.,க்கள் மத்தியில், அச்சம் நிலவுகிறது.
இக்கூட்டத்திற்கு பின், சி.இ.ஓ.,க்கள் பலர்,
பணியிட மாற்றம் செய்யப்படலாம் என, கல்வித்
துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment