தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில்
(2014-15) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.
படிப்பில் மாணவர்களைச் சேர்க்க
ஜூன் 18-ஆம் தேதியிலிருந்து முதல்
கட்ட கலந்தாய்வை நடத்த மருத்துவக்
கல்வி தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளது.
(2014-15) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.
படிப்பில் மாணவர்களைச் சேர்க்க
ஜூன் 18-ஆம் தேதியிலிருந்து முதல்
கட்ட கலந்தாய்வை நடத்த மருத்துவக்
கல்வி தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளது.
இதுவரை 27,966 விண்ணப்பங்கள்:
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில்
சேர விண்ணப்ப விநியோகம் கடந்த
புதன்கிழமை (மே 14) தொடங்கியது.
இதுவரை மொத்தம் 27,966 மாணவர்கள்
விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.
விண்ணப்ப விநியோகம்
ஞாயிற்றுக்கிழமை (மே 25)
கிடையாது.
ஜூன் 2 கடைசி: விண்ணப்பங்களைப்
பெற மே 30-ஆம்
தேதி கடைசி நாளாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
மருத்துவக் கல்வி தேர்வுக்
குழுவுக்கு வந்து சேர
கடைசி நாள் ஜூன் 2-ஆம்
தேதியாகும். இதுவரை 2,500-க்கும்
மேற்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவக்
கல்வி தேர்வுக்
குழுவுக்கு வந்து சேர்ந்துள்ளன.
ஜூன் 12-இல் தரவரிசைப் பட்டியல்:
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர
விண்ணப்பித்து வரும் மாணவர்களில்
பலர் மறு மதிப்பீட்டுக்கு
விண்ணப்பித்துள்ளனர்.
மறு மதிப்பீட்டுக்குப்
பிறகு மாணவர்கள் பெற்ற
மதிப்பெண்ணை ஜூன் 10-ஆம்
தேதிக்குள் அளிப்பதாக மருத்துவக்
கல்வி தேர்வுக் குழுவிடம் பள்ளிக்
கல்வித் துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். மாணவர்களின்
மறு மதிப்பீடு மதிப்பெண்கள் ஜூன் 10-
ஆம் தேதிக்குள் கிடைத்து விட்டால்,
ஜூன் 12-ஆம் தேதி எம்.பி.பி.எஸ்.-
பி.டி.எஸ். தரவரிசைப்
பட்டியலை வெளியிட மருத்துவக்
கல்வி தேர்வுக்
குழு முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment