பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட இரண்டு நாள்களில் 2.39 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர்.
வரும் 30-ஆம்
தேதி வரை பதிவு செய்யும்
மாணவர்களுக்கு ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம்
தேதி வெளியிடப்பட்டன. பள்ளிகளின்
மூலம் தேர்வு எழுதிய 8.21 லட்சம் பேரில்
90.6 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றனர்.
பள்ளிகளின் மூலமாக தேர்வு எழுதிய
மாணவர்களுக்கான மதிப்பெண்
சான்றிதழ்கள் புதன்கிழமை (மே 21)
முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மதிப்பெண் சான்றிதழை பெற வரும்
மாணவர்கள் உரிய ஆவணங்களுடன்
வந்து பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்காக
ஆன்-லைனில்
பதிவு செய்துகொள்ளலாம் என
அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த இரண்டு நாள்களில் 2.39
லட்சம் பேர் பள்ளிகளில் ஆன்-லைன் மூலம்
வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்ததாக
பள்ளிக் கல்வி இயக்குநர்
வி.சி.ராமேஸ்வர முருகன் கூறினார்.
மதிப்பெண் சான்றிதழைப் பெற வரும்
மாணவர்கள் தங்களது குடும்ப ரேஷன்
அட்டை, ஜாதிச் சான்றிதழ்,
ஏற்கெனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு செய்திருந்தால் அந்த
பதிவு அட்டை உள்ளிட்ட
ஆவணங்களை பள்ளிக்கு எடுத்துவந்து வேலைவாய்ப்புக்க
பதிவுசெய்துகொள்ளலாம்.
கடந்த ஆண்டு 5 லட்சத்து 4 ஆயிரம்
மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக ஆன்-
லைனில் பதிவு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment