கல்வி உரிமை சட்டத்தின் தனியார்
பள்ளிகளில் 25 சதவீத இலவச கல்வி
ஒதுக்கீடு பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளதால்,பள்ளிகளில் 25 சதவீத இலவச கல்வி
சுயநிதி பள்ளி நிர்வாகத்தினரும்,
பெற்றோர்களும் பெரும்
அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இலவச
கல்வி ஒதுக்கீடு பெற
பல்வேறு நிபந்தனைகள்
விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெற்றோரின்
ஆண்டு வருமானம் ரூ.2
லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
ஜாதி வாரி ஒதுக்கீட்டின்படிதான் இந்த
ஒதுக்கீட்டில்தான் இடம் பெற முடியும்.
ஒரு மாணவரின் இருப்பிடத்திலிருந்து1
கி.மீ சுற்றளவில் இலவசக்கல்வி தரும்
அரசு பள்ளி அல்லது நகராசட்சி பள்ளி,
ஒன்றியப்பள்ளி, உதவிபெறும் தனியார்
பள்ளி இருந்தால், அத்தகைய பள்ளிகளில்
மாணவர்கள் சேராமல்,
சுயநிதிப்பள்ளிகளில் சேர்ந்தால் அந்த
மாணவருக்கு இலவச கல்வி திட்டத்தின்
கீழ் கட்டண ஈட்டுத்தொகையை,
அப்பள்ளிகள் அரசிடமிருந்து பெற
முடியாது.
சுயநிதிப் பள்ளியில்
இலவசக்கல்வி ஒதுக்கீட்டில் இடம்
பெற்றாலும், பள்ளி கட்டணம்
மட்டுமே அவர்கள் செலுத்த
வேண்டியது இருக்காது.
புத்தகங்கள், சீருடை,
நோட்டு புத்தகங்கள் போன்ற
வசதிகளுக்கு அவர்கள் கட்டணம் செலுத்த
வேண்டும்.
மேலும் கல்வி சார
நடவடிக்கைகளுக்காக கட்டணம் மற்றும்
வாகன வசதிக்கட்டணம்
ஆகியவற்றை அம்மாணவர் செலுத்தியாக
வேண்டும். குறிப்பிட்ட பள்ளியில் இடம்
தர வேண்டும் என்று கேட்கும்
உரிமை பெற்றோருக்கு கிடையாது.
இந்த இலவச கல்வி ஒதுக்கீடு திட்டத்தின்
படி சுயநிதிப்பள்ளிகளில் (நர்சரி மற்றும்
மெட்ரிக்) சேர்க்கப்படும்
மாணவர்களுக்குரிய
அரசு நிர்ணயிக்கும்
பள்ளி கட்டணத்தை ஈடு செய்யுமாறு பள்ளி நிர்வாகம்
அரசிடம் கோர வேண்டும்.
அத்தொகையை அரசு பள்ளிக்கு கோரிய
அடுத்தடுத்த மாதங்களில் வழங்க
வேண்டும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக
சுயநிதிப் பள்ளிகளுக்கு, அரசிடம்
கோரப்பட்ட தொகை இதுநாள்
வரை வழங்கப்படவில்லை. இலவச
கல்வி திட்டத்தின்
ஒரு பகுதி தொகையை மத்தியஅரசு ஏற்க
வேண்டும். ஆனால் இதுவரை மத்திய
அரசிடமிருந்து, மாநில
அரசுக்கு அத்தொகை வந்ததாக
தெரியவில்லை.
மேற்கண்ட
நிபந்தனைகளை தெரிந்து கொள்ளாமல்
கல்வித்துறை அதிகாரிகள்,
உரிமை இல்லாத மாணவர்களுக்கும்
இலவச கல்வி ஒதுக்கீடு தர வேண்டும் என
சுயநிதி பள்ளி நிர்வாகத்தை அதிகாரிகள்
வலியுறுத்துகின்றனர்.
எனவே கல்வித்துறை அதிகாரிகளுக்கு,
கல்வி உரிமை சட்டம்
குறித்து பயிற்சி வகுப்பு நடத்தி, 25
சதவீத ஒதுக்கீட்டை அவர்கள்
தெரிந்து கொள்ள போதிய
விபரங்களை பள்ளிக்
கல்வித்துறை அளிக்க வேண்டும் என
கடலூர் மாவட்ட மெட்ரிக்
பள்ளி நிர்வாகிகள் சங்கத் தலைவர்
சி.ஆர்.லட்சுமிகாந்தன் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment