Saturday, May 10, 2014

ப்ளஸ் 2 தேர்வு முடிவு திருச்சிக்கு 9ம் இடம்

ப்ளஸ் 2 தேர்ச்சியில் மாநில
அளவில் திருச்சிக்கு 9வது இடம்
கிடைத்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில், திருச்சி,
முசிறி, லால்குடி ஆகிய 3
கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில்
உள்ள 213 பள்ளிகளை சேர்ந்த 31 ஆயிரத்து 401
மாணவ மாணவிகள் ப்ளஸ் 2 தேர்வு எழுதினர்.
இதில் 29 ஆயிரத்து 629 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில்
94.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டு 93.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன் மூலம் மாநில அளவிலான ப்ளஸ் 2
தேர்ச்சியில் திருச்சி மாவட்டம்
9வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்தாண்டு 7வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு முதலிடத்தை பிடித்த விருதுநகர்
மாவட்டம் 3வது இடத்தை பிடித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் 97.05 சதவீத
தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.
இரண்டாம் இடத்தை 96.5 சதவீத தேர்ச்சியுடன்
நாமக்கல் மாவட்டமும், 96.03 சதவீத தேர்ச்சியுடன்
பெரம்பலூர் மாவட்டம் 4வது இடத்தையும், 95.7
சதவீத தேர்ச்சியுடன் தூத்துக்குடி மாவட்டம்
5வது இடத்தை பிடித்தது. கன்னியாகுமரி 95.4
சதவீத தேர்ச்சியுடன் 6வது இடத்தையும்,
கோவை 94.8 சதவீத தேர்ச்சியுடன்
7வது இடத்தையும், திருநெல்வேலி 94.3 சதவீத
தேர்ச்சியுடன் 8வது இடத்தையும் பிடித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் 94.1 சதவீத தேர்ச்சியுடன்
10வது இடத்தையும் பிடித்துள்ளது. பள்ளிகள்
எண்ணிக்கை, மாணவ மாணவிகள்
எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் மாநில
அளவில் முதல் 10 இடத்தில் கோவை மாவட்டம் 317
பள்ளிகளில் பயின்ற 34 ஆயிரத்து 705 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு அடுத்ததாக
நெல்லை மாவட்டம் 270 பள்ளிகளில் பயின்ற 33
ஆயிரத்து 317 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
3வது இடத்தில் திருச்சி மாவட்டம் 213 பள்ளிகளில்
பயின்ற 29 ஆயிரத்து 629 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக 406 பள்ளிகளில் பயின்ற 48
ஆயிரத்து 776 பேர்
தேர்ச்சி பெற்று சென்னை 17வது இடத்தை பிடித்துள்ளது.
264 பள்ளிகளில் பயின்ற 34 ஆயிரத்து 852 பேர்
தேர்ச்சி பெற்று மதுரை 16வது இடத்தை பிடித்துள்ளது.
246 பள்ளிகளில் பயின்ற 34 ஆயிரத்து 852 பேர்
தேர்ச்சி பெற்று சேலம்
18வது இடத்தை பிடித்துள்ளது.

No comments:

Post a Comment