Saturday, May 10, 2014

ப்ளஸ் 2 தேர்வு முடிவு முசிறி பள்ளிகள் சாதனை

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.முசிறி அமலா பெண்கள் பள்ளியில் பயின்ற 333 மாணவிகள்
தேர்வு எழுதினர். இதில் அனைவரும்
தேர்ச்சி பெற்றனர்.

மாணவி சுகந்தி, தமிழ், 191, ஆங்கிலம், 197,
இயற்பியல், 200, வேதியியல், 198, உயிரியல், 197,
கணிதம், 200 என மொத்தம் 1,183 மார்க்
பெற்று பள்ளியில் முதலிடத்தை பிடித்தார்.
மாணவி திவ்யா தமிழ், 194, ஆங்கிலம், 191,
இயற்பியல், 199, வேதியியல், 200, உயிரியல், 195,
கணிதம், 200 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும்,
மாணவி புவனேஸ்வரி, 1,157 மதிப்பெண்கள்
பெற்று மூன்றாம் இடமும் பிடித்தார். இயற்பியல்,
வேதியியல், வணிகவியல் பாடங்களில் ஒருவரும்,
கணிதத்தில் 2 பேரும் சென்டம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளையும், நூறு சதவிகித
தேர்ச்சிக்கு ஒத்துழைத்த ஆசிரியைகளை, தாளாளர்
அமலோற்மேரி,
தலைமையாசிரியை மேரி ஹில்டா மேரி ஆகியோர்
பாராட்டினர்.
அரசு பெண்கள் பள்ளி மாணவி கமலி, 1,101, மார்க்
பெற்று முதலிடமும், நந்தினி, 1,047, மார்க்
பெற்று 2ம் இடமும், பானுமதி, 981, மார்க் பெற்று 3ம்
இடமும் பிடித்தனர். இப்பள்ளியில்
தேர்வு எழுதிய 248 மாணவிகளில் 235 பேர்
தேர்ச்சி பெற்றனர். பள்ளி 95 சதவீத தேர்ச்சி பெற்றது.
அரசு ஆண்கள் பள்ளி மாணவர் பாலகிருஷ்ணன்,
1,119, மார்க் பெற்று முதலிடமும், விக்னேஷ்வரன்,
1,091, மார்க் பெற்று 2ம் இடமும், தினகரன் 955 மார்க்
பெற்று 3ம் இடமும் பிடித்தனர். இப்பள்ளியில்
தேர்வு எழுதிய 190 மாணவர்களில் 165 பேர்
தேர்ச்சி பெற்றனர். பள்ளி 87 சதவீத தேர்ச்சி பெற்றது.

No comments:

Post a Comment