Saturday, May 03, 2014

அரசு பாலிடெக்னிக்குகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை: மே 5 முதல் விண்ணப்பம் விநியோகம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில்
நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 41
பாலிடெக்னிக் கல்லூரிகளில்
இதற்கான விண்ணப்பங்கள் மே 5-ஆம்
தேதி முதல் 23-ஆம்
தேதி வரை காலை 10 மணி முதல்
மாலை 5
மணி வரை விநியோகிக்கப்பட
உள்ளன.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 150 ஆகும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப்
பிரிவு மாணவர்களுக்கு
விண்ணப்பக் கட்டணம்
செலுத்துவதிலிருந்து விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது. கட்டண
விலக்கைப் பெற ஜாதிச்
சான்றிதழின் சான்றொப்பமிட்ட
நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த
விண்ணப்பங்களை அந்தந்த
அரசு பாலிடெக்னிக்
கல்லூரிகளுக்கு மே 23-ஆம்
தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
சென்னையைப்
பொருத்தவரை தரமணியில் உள்ள
மத்திய பாலிடெக்னிக் கல்லூரி,
அச்சு தொழில்நுட்ப நிறுவனம்,
தோல் தொழில்நுட்ப நிறுவனம்,
நெசவு தொழில்நுட்ப நிறுவனம்,
மாநில வணிகக் கல்வி நிறுவனம்,
டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர்
பாலிடெக்னிக் கல்லூரி மற்றும்
புரசைவாக்கத்தில் உள்ள
அரசு பாலிடெக்னிக்
கல்லூரி ஆகியவற்றில்
விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட
உள்ளன.

No comments:

Post a Comment