ஸ்ரீரங்கம் தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை, உறுப்பினராக அங்கீகரித்து, பொது மாணவர் சேர்க்கைக்கான, தேர்வு நடத்த அனுமதிக்குமாறு, "கிளாட்'
குழுவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால உத்தரவிட்டது.
குழுவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால உத்தரவிட்டது.
திருச்சி வக்கீல் ராஜ்குமார் தாக்கல்
செய்த மனு: திருச்சி ஸ்ரீரங்கம்
அருகே நாவலூர் கோட்டப்பட்டுவில்
தமிழ்நாடு தேசிய
சட்டப்பள்ளி உள்ளது. இப்பள்ளி உட்பட,
இந்தியாவில் 17 தேசிய சட்டப்
பள்ளிகள் உள்ளன. இவற்றில்
சட்டப்படிப்பிற்கானபொது மாணவர்
சேர்க்கை தேர்வை (சி.எல்.ஏ.டீ.,-
கிளாட்), குஜராத் தேசிய சட்டப்
பல்கலை நடத்துகிறது. "கிளாட்'
குழுவில் உறுப்பினராக
சேர்வதற்கும், மாணவர்
சேர்க்கைக்கு அனுமதிக்குமாறும்,
தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.
"கிளாட்' தேர்வு மே 11 ல்,
துவங்குகிறது. தமிழ்நாடு தேசிய
சட்டப் பள்ளியை உறுப்பினராக
சேர்க்கவும், "கிளாட்'
தேர்வு அடிப்படையில் மாணவர்
சேர்க்கை அனுமதிக்கவும் உத்தரவிட
வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன்,
வி.எம்.வேலுமணி கொண்ட பெஞ்ச்
முன், மனு விசாரணைக்கு வந்தது.
"கிளாட்' குழு சார்பில் ஆஜரான
வக்கீல், ""தமிழ்நாடு தேசிய சட்டப்
பள்ளியை, ஆய்வு செய்யவில்லை.
ஆய்வு செய்த பின் தான்,
அனுமதி வழங்க முடியும்,'' என்றார்.
நீதிபதிகள்: இப்பிரச்னையில் "கிளாட்'
குழு சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற
அமைப்பல்ல. தமிழ்நாடு தேசிய சட்டப்
பள்ளியை, உறுப்பினராக சேர்த்து,
தேர்வு அடிப்படையில் மாணவர்
சேர்க்கைக்கு "கிளாட்'குழு
அமைப்பாளர் அனுமதிக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கையானது,
இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பைப்
பொறுத்து அமையும், என
இடைக்கால உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment