ப்ளஸ் 2 தேர்வில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 64 பள்ளிகள் நூறு சதவீத
தேர்ச்சி அடைந்துள்ளது. முதல்வர்
ஜெயலலிதா தொகுதி 97.26 சதவீத
தேர்ச்சி பெற்றுள்ளது.
திருச்சி வருவாய் மாவட்டத்தில், திருச்சி, முசிறி, லால்குடி ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன.தேர்ச்சி அடைந்துள்ளது. முதல்வர்
ஜெயலலிதா தொகுதி 97.26 சதவீத
தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்த 3 கல்வி மாவட்டகளில் 77 அரசுப் பள்ளிகள்,
மாநகராட்சி பள்ளி 1, ஆதிதிராவிடர் நலப்
பள்ளி 13, அரசு உதவிப் பெறும் பள்ளி 69,
சுயநிதி பள்ளி 5, ஆங்கிலோ இந்தியன் பள்ளி 3,
அரசு பார்வையற்றோர் பள்ளி 1, இதர பள்ளி 2,
மெட்ரிக் பள்ளி 42 உள்பட 213 பள்ளிகள் உள்ளன.
இதில் பயின்ற 17 ஆயிரத்து 287 மாணவிகள்
உள்பட 31 ஆயிரத்து 401 பேர் ப்ளஸ் 2
தேர்வு எழுதினர். ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்
நேற்று காலை வெளியிடப்பட்டன. இதில் 12
ஆயிரத்து 342 மாணவர்கள், 17 ஆயிரத்து 287
மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 629 பேர்
தேர்ச்சி பெற்றனர். திருச்சி மாவட்டத்தில் இது 94.36
சதவீத தேர்ச்சியாகும். இதில், அரசு பள்ளி 6,
மாநகராட்சி பள்ளி 1, அரசு பார்வையற்றோர் பள்ளி 1,
அரசு உதவிப் பெறும் பள்ளி 15, சுயநிதிப்
பள்ளி 10, மெட்ரிக் பள்ளி 30, ஆகியவற்றில்
பயின்ற அனைத்து மாணவ மாணவிகளும் ப்ளஸ் 2
தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம்
திருச்சி மாவட்டத்தில் 64 பள்ளிகள் நூறு சதவீத
தேர்ச்சியை எட்டியுள்ளது. கடந்தாண்டு 49
பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.
திருச்சி மாவட்டத்தில் இயற்பியல் பாடத்தில் 57
பேர், வேதியியல் பாடத்தில் 65 பேர், உயிரியல்
பாடத்தில் 21 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில்
33 பேர், கணக்கு பாடத்தில் 115 பேர், பொருளாதார
பாடத்தில் 24 பேர், வணிகவியலில் 108 பேர்,
அக்கவுண்டன்சி பாடத்தில் 86 பேர், வணிக
கணக்கு பாடத்தில் 27 பேர் சென்டம் பெற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் குறைந்தபட்சம்
முசிறி ஆமூர் அரசுப் பள்ளியில் பயின்ற 68
பேரில் 40 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்
இது 58.8 சதவீத தேர்ச்சியாகும். கடந்த 2012ம்
ஆண்டில் 27 சதவீத தேர்ச்சி கண்ட வளநாடு அரசுப்
பள்ளி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதால்
இந்தாண்டு 99 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இங்கு பயின்ற 75 மாணவ மாணவிகளில் 74 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின்
ஸ்ரீரங்கம் தொகுதியில் திருச்செந்துறை, பூங்கொடி,
சோமரசம்பேட்டை, எட்டறை, அயிலாப்பேட்டை,
இனாம்குளத்தூர். கண்ணுடையான்பட்டி,
இனாம்மாத்தூர் ஆகிய 8 அரசுப் பள்ளிகள் மற்றும்
அரசு உதவிப் பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளிகள்
என மொத்தம் 19 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள்
97.26 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
No comments:
Post a Comment