Wednesday, May 14, 2014

அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க முனைப்பு!

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்
வெளியாகும் நாள் நெருங்கி வரும்
சூழலில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர்
சேர்க்கையை அதிகரிக்க கல்வித் துறையினர் முனைப்புடன் களமிறங்கியுள்ளனர்.

அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம்,
தேர்ச்சி விகிதத்தால் தனியார்
பள்ளிகளையே பெற்றோர்
நாடி தங்களது குழந்தைகளை சேர்ப்பது தொடர்கதை.
இதனால் ஆண்டுதோறும் தனியார்
பள்ளிகளின்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாணவர்
சேர்க்கையே பள்ளி தொடர்ந்து நடப்பதற்கான
ஆணிவேர் என்ற உண்மையை ஆசிரியர்
சமூகமும் உணரத் தொடங்கியது.
தமிழக அரசும் தனது பங்காக 14 இலவசத்
திட்டங்களை அறிவித்து, பள்ளிக்
கல்வித்துறையும் அதை மாவட்ட
வாரியாக முனைப்புடன்
செயல்படுத்தியது. இதன் பலனாக கடந்த 2
ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில்
மாணவர் சேர்க்கை 10 சதம் அதிகரித்தது.
எடுத்துக்காட்டாக மாவட்டத்தில் உள்ள 202
அரசுப்பள்ளிகளில் 2012-13 -ம்
கல்வியாண்டைவிட 2013- 14-ல்
கூடுதலாக 555 மாணவர்கள் சேர்ந்தனர்.
அதேநேரத்தில் பொதுத் தேர்வுகளின்
தேர்ச்சி விகிதமும் கடந்த 2 ஆண்டுகளாக
நல்ல முன்னேற்றத்தைக்
கண்டுவருகிறது.
இது மக்களுக்கு அரசுப்பள்ளிகள் மீதான
பார்வையில் மாற்றம்
ஏற்பட்டிருப்பதை உணர்த்துகிறது.
மாணவர்களின் தேர்ச்சி விகிதம்
குறைந்து வருவதால் சம்பந்தப்பட்ட
பள்ளித் தலைமை ஆசிரியரும்,
ஆசிரியர்களுமே அதற்குப்
பொறுப்பேற்க வேண்டுமென பள்ளிக்
கல்வித்துறை அதிரடியாக அறிவித்தது.
இது ஆசிரியர்களிடையே சலசலப்பை உருவாக்கியபோது
பொதுமக்கள், பெற்றோர்கள்,
கல்வியாளர்களிடையே பலத்த
வரவேற்பைப் பெற்றது.
தமிழக அரசின் அறிவுறுத்தல் ஒருபுறம்
இருந்தபோதும், பள்ளி,
பணியிடத்தை தக்க வைக்க வேண்டும்
என்ற அடிப்படை உண்மையின்
தீவிரத்தை அறிந்துள்ளதால்,
தங்களது பள்ளிகளில் மாணவர்கள்
சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமென்ற
தன்முனைப்புடன் விடுமுறையைப்
புறந்தள்ளிவிட்டு ஆசிரியர்களும்,
தலைமை ஆசிரியர்களும் கிராமம்
கிராமமாக நேரில்
சென்று பெற்றோரையும்,
மாணவர்களையும் அணுகி வருவதைப்
பரவலாகப் பார்க்க முடிகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளித்
தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலப்
பொதுச்செயலர் சாமி.
சத்தியமூர்த்தி கூறியது:
அரசுப்பள்ளிகள் வெற்றிகரமாக இயங்க
மாணவர்கள் சேர்க்கையில் கவனம்
செலுத்த வேண்டியது காலத்தின்
கட்டாயம்.
அரசுப் பள்ளிகள் 90 சதம் (கட்டடம்,
கழிப்பறை, குடிநீர்)
தன்னிறைவு பெற்றுள்ளதுடன்,
மாணவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள்
கிராமங்கள் வரை ஊடுருவியுள்ளதால்
வரும் கல்வியாண்டில் மாணவர்கள்
சேர்க்கை அதிகரிக்கும் என்றார்.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நா.
அருள்முருகன் கூறியது:
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை மாவட்டத்தில்
23,651 பேர் எழுதியுள்ளனர்.
இவர்களில், 90 சதம் பேரை அரசுப்
பள்ளிகளிலேயே பிளஸ் 1-ல் சேர்க்கும்
இலக்கை நிர்ணயித்துப்
பணியாற்றி வருகிறோம் என்றார்.

No comments:

Post a Comment