Friday, May 30, 2014

ஆர்.டி.இ., விண்ணப்பம் பெறநாளை கடைசி நாள்

:இலவச மற்றும்
கட்டாயக் கல்வி சட்டத்தின்
(ஆர்.டி.இ.,) கீழ், தனியார் பள்ளிகளில், விண்ணப்பம் பெற, நாளை கடைசி நாள்.
இதுவரை, 20
ஆயிரத்திற்கும் அதிகமான
விண்ணப்பங்கள்,
வினியோகிக்கப்பட்டு உள்ளன.ஆர்.டி.இ.,
சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள், தங்களிடம்
உள்ள நுழைவு வகுப்பு இடங்களில், 25
சதவீதத்தை, ஏழை, எளிய, பொருளாதாரத்தில்
பின் தங்கிய பெற்றோரின் குழந்தைகளுக்கு,
ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவ,
மாணவியரின் கல்வி செலவை, மத்திய
அரசு ஏற்கிறது. 'ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டின்
கீழ், கடந்த, 3ம் தேதி முதல், 18ம் தேதி வரை,
விண்ணப்பம் வழங்க வேண்டும்' என, தனியார்
பள்ளிகளுக்கு, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்
உத்தரவிட்டது.பின், விண்ணப்ப
வினியோகத்தை, வரும் 31ம் தேதி வரை,
நீட்டிப்பு செய்து அறிவித்தது.இதுகுறித்து,
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரக வட்டாரம்
கூறுகையில், 'இதுவரை, 20 ஆயிரத்திற்கும்
அதிகமான விண்ணப்பங்கள்,
பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
தகுதி வாய்ந்த பெற்றோர், 31ம்
தேதி மாலை வரை, விண்ணப்பம் பெற்று,
பூர்த்தி செய்து, பள்ளிகளில் அளிக்கலாம்' என,
தெரிவித்தது.

No comments:

Post a Comment