Friday, May 30, 2014

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் வாங்க இன்றே கடைசி நாள்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.,
படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற, இன்று கடைசி நாள்.

நேற்று வரை, 29,933 பேர்
விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக்
கல்லுாரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக்
கல்லுாரியும் உள்ளன. இதில், 15 சதவீத அகில
இந்திய ஒதுக்கீடு போக, 2,172 எம்.பி.பி.எஸ்.,
இடங்களும், 85 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன.
சுயநிதி கல்லுாரிகள் மூலம், 900 இடங்கள்
வரை, மாநிலத்திற்கு கிடைக்கும்.இந்த
இடங்களுக்கு, கலந்தாய்வு மூலம் மாணவர்
சேர்க்கை நடத்த உள்ளது. இதற்கான,
விண்ணப்ப வினியோகம், மே, 14ல்
துவங்கியது.
நேற்று வரை, 29,933 பேர்
விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்; 17,142 பேர்,
விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
விண்ணப்பங்கள் சென்று சேர்ந்ததை,
www.tnhealth.org என்ற இணையதளம் வாயிலாக
மாணவர்கள்
உறுதி செய்து கொள்ளலாம்.விண்ணப்பம் பெற,
இன்றே கடைசி நாள். பூர்த்தி செய்த
விண்ணப்பங்களை, ஜூன், 2ம் தேதிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும்.மாணவர் தர
வரிசைப்பட்டியல், ஜூன், 12ம்
தேதி வெளியிடப்பட்டு, 18ம் தேதி முதற்கட்ட
கலந்தாய்வு துவங்கும்.

No comments:

Post a Comment