திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில்
குழந்தைகளுக்கான இலவச
கட்டாய மற்றும் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் நலிந்த மற்றும் பின்தங்கிய
மாணவர்களுக்கு சேர்க்கை வழங்குவது குறித்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
குழந்தைகளுக்கான இலவச
கட்டாய மற்றும் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் நலிந்த மற்றும் பின்தங்கிய
மாணவர்களுக்கு சேர்க்கை வழங்குவது குறித்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
முதல்நாள் பயிற்சிக்கு மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலர்
செல்வகுமார்
தலைமை வகித்து பேசுகையில்,
""இலவச கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ்
மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கப்பட
வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள்
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம்
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் ம
ற்றும் அந்தந்த பள்ளிகளில்
விநியோகிக்கப்படுகிறது,'' என்றார்.
பயிற்சியில் மாவட்டம் முழுவதும் உள்ள
117 தனியார் பள்ளி முதல்வர்கள்
பங்கேற்றனர். இரண்டாம் நாளான
நேற்றுமுன்தினம் நடந்த
பயிற்சிக்கு மாவட்ட
தொடக்கக்கல்வி அலுவலர் பொன்னம்பலம்
தலைமை வகித்தார். அனைவருக்கும்
கல்வி இயக்க தகவல் சாதனை அலுவலர்
செந்தில்குமார்
பயிற்சியளித்து பேசியதாவது:
ஒவ்வொரு சிறுபான்மையற்ற தனியார்
சுயநிதி பள்ளியிலும், முதலாம்
வகுப்பில் செயல்படும் பிரிவுகளின்
எண்ணிக்கை என்ன என்பதையும்,
நுழைவு நிலை வகுப்பில் உள்ள
மொத்த இடங்கள் எவ்வளவு என்பதும்
திரட்டப்படுகிறது. இதன் அடிப்படையில்
ஒவ்வொரு பள்ளிக்குமான 25
விழுக்காடு ஒதுக்கீட்டிற்கான இடங்கள்
கணக்கிடப்பட்டு, அதுகுறித்த விபரங்கள்
அறிவிப்பு பலகையில் ஒட்டவேண்டும்.
தங்கள் பகுதியில் உள்ள நலிவடைந்த
மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட
குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி வழங்க
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள
வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இப்பயிற்சியில் 117
தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment