Monday, May 19, 2014

பொறியியல் விண்ணப்பிக்க நாளை கடைசி

பொறியியல் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம்
செவ்வாய்க்கிழமை மாலை முடிகிறது.

தமிழகத்தில் பொறியியல்
படிப்புக்கான விண்ணப்பங்கள்
மே 3-ம் தேதி முதல் மாநிலம்
முழுவதும் 59 மையங்களில்
வழங்கப்பட்டு வருகின்றன.
சனிக்கிழமை வரை 2 லட்சத்து 2
ஆயிரத்து 806 விண்ணப்பங்கள்
விற்பனையாகி இருப்பதாக
தமிழ்நாடு பொறியியல் மாணவர்
சேர்க்கை செயலாளர் பேராசிரியர்
வி.ரைமண்ட் உத்தரியராஜ்
தெரிவித்தார்.
பூர்த்தி செய்த விண்ணப்ப
படிவங்களை, உரிய ஆவணங்களுடன்
நாளை (செவ்வாய்க்கிழமை)
மாலை 5.30 மணிக்குள்
சென்னை கிண்டியில் உள்ள
அண்ணா பல்கலைக்கழகத்தில்
சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு ரேண்டம் எண்
ஒதுக்கீடு செய்வது, ரேங்க் பட்டியல்
வெளியிடுவது ஆகிய பணிகள்
முடிவடைந்ததும், விரும்பும்
கல்லூரி மற்றும்
பாடப்பிரிவை தேர்வுசெய்வதற்கான
கலந்தாய்வு ஜூன் 3-வது வாரத்தில்
நடத்தப்படும்
என்று அண்ணா பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment