Friday, May 30, 2014

மழைநீர் சேகரிக்கும் பள்ளிக்கு பரிசு

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறந்த
முறையில் செயல்படுத்தும்
பள்ளிக்கு பரிசு வழங்கப்படும்'
என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகல்வித்துறை முதன்மை செயலர்
சபீதா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாநில
குடிநீர் வினியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம்,
முதல்வர் ஜெ., தலைமையில் நடத்தப்பட்டது.
அதில், 'அனைத்துப்பள்ளிகளிலும், ஜூன்
30க்குள், மழைநீர்
சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்'
என, முதல்வர் உத்தரவிட்டார்.
ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ள
பள்ளி கட்டடங்களில், ஜூன் 30க்குள், மீண்டும்
செயல்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.
அதற்காக,
மாணவர்களைக்கொண்டு ஊர்வலங்கள் நடத்த
வேண்டும். மழைநீர் சேகரிப்பு தொடர்பாக,
பள்ளி வளாக சுவர்களில், வாசகங்கள்,
கரும்பலகையில், தினம் ஒரு தகவல் எழுத
வேண்டும். பள்ளிகளில், இறைவணக்கத்தின்
போது, மழைநீர் சேகரிப்பு உறுதிமொழி எடுக்க
வேண்டும்.குடிநீர் வடிகால் வாரிய
இன்ஜினியர்கள் மூலம், அத்திட்டத்தின்
அவசியம் தொடர்பாக,
மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும்.
மேற்கண்ட வழிமுறைகளை கையாண்டு,
மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறந்த
முறையில் செயல்படுத்தும்
பள்ளிக்கு விருது வழங்கப்படும். 'மழைநீர்
சேகரிப்பு' என்ற தலைப்பில், வண்ணம்
தீட்டுதல்
உள்ளிட்ட போட்டிகளை,
அனைத்து பள்ளிகளிலும் கிராம அளவில்
துவங்கி நடத்த வேண்டும். இப்பணி தொடர்பாக,
இயக்குனர்கள், களப்பணி அதிகாரிகள் மூலம்
வாரம் ஒருமுறை ஆய்வுக்கூட்டம் நடத்தி,
துறைக்கு, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment