Tuesday, June 03, 2014

பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: 'தத்கல்' மூலம் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு,
குறித்த காலத்தில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், 'தத்கல்'
திட்டத்தின் கீழ், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த, அரசுத்
தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு : பிளஸ்
2 சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், ஜூலையில்
நடக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட
காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்க தவறி,
தற்போது விண்ணப்பிக்க விரும்பும்
தனித்தேர்வர்கள், நாளையும்,
நாளை மறுநாளும் பதிவு செய்து கொள்ளலாம்.
'தத்கல்' திட்டத்தில் தேர்வெழுத விரும்பும்,
தனித்தேர்வர்கள், தங்கள் மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில்
பதிவு செய்ய வேண்டும். மார்ச்சில் எழுதிய
தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ் நகலை,
விண்ணப்பத்தை பதிவு செய்யும்
அலுவலரிடம் காட்ட வேண்டும். தேர்வெழுத,
ஒரு பாடத்திற்கு, 50 ரூபாயும், இதர கட்டணமாக,
35 ரூபாயும் செலுத்த வேண்டும். அத்துடன்
கூடுதலாக, சிறப்பு அனுமதி கட்டணமாக, 1000
ரூபாய் மற்றும் பதிவு கட்டணம், 50 ரூபாய்
செலுத்த வேண்டும். தேர்வுக் கூட
அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய
நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு,
அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment