'பிளஸ் 2 முடித்து, உயர் கல்வி பயில விரும்புவோர், உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்' என, இந்திய அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய அலுவலர்கள் சங்கம், 1907ல்
துவங்கப்பட்டது. இதில், உயர்நீதிமன்ற
நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த
அமைப்பின் சார்பில், அரசு மற்றும்
மாநகராட்சி பள்ளிகளில், பிளஸ் 2 முடித்து,
உயர்கல்வி பயில விரும்பும்
ஏழை மாணவர்களுக்கு, உதவித்
தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி,
இந்த ஆண்டு உதவித் தொகை பெற விரும்பும்
மாணவர்கள், www.ioachennai.com என்ற
இணையதளத்தில், விண்ணப்பப்
படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், உரிய
சான்றுகள் இணைத்து, 'பொது செயலர், இந்திய
அலுவலர் சங்கம், நூற்றாண்டு விழா வளாகம்,
எண்.69, திரு.வி.க., நெடுஞ்சாலை,
ராயப்பேட்டை, சென்னை - 14' என்ற முகவரிக்கு,
ஜூலை, 15க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
உதவித் தொகை பெற, எத்தனை பேர்
வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment