Friday, June 13, 2014

ஆராய்ச்சியாளர், விரிவுரையாளர்தகுதி தேர்வு: ஜூன் 22ல் நடக்கிறது

சி.எஸ்.ஐ.ஆர்.,
(அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி கழகம்) மற்றும் யு.ஜி.சி., இணைந்து நடத்தும், இளநிலை ஆராய்ச்சியாளர், விரிவுரையாளர் தேசிய
தகுதி தேர்வு வரும் 22ம் தேதி, இந்தியா முழுவதும் உள்ள 26 மையங்களில் நடக்கிறது.
தமிழகத்தில்
சென்னை, காரைக்குடி ஆகிய
இரண்டு இடங்களில் நடக்கிறது.காரைக்குடியில்
உமையாள் ராமனாதன் கல்லுாரி,
அழகப்பா அரசு கலை கல்லுாரி,
அழகப்பா மெட்ரிக்., மேல்நிலை பள்ளி,
அழகப்பா பாலிடெக்னிக், சிக்ரி வளாகம்,
கேந்திரிய வித்யாலயா ஆகிய மையங்களில்
நடக்கிறது. இதில் 6100 பேர் பங்கேற்கின்றனர்.
நுழைவு சீட்டு தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
போட்டோவுடன் கூடிய நுழைவு சீட்டை, www.csirhrdg.res.in
என்ற இணையதளத்திலிருந்து, நேரடியாக பதவிறக்கம்
செய்து கொள்ளலாம். நுழைவு சீட்டில்,
போட்டோ இல்லையெனில், இரண்டு பாஸ்போர்ட் சைஸ்
போட்டோ, போட்டோ அடையாள அட்டைக்கான, பாஸ்போர்ட்,
ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, ஆதார்
அட்டை, இவைகளில் ஏதேனும்
ஒன்றை நுழைவு சீட்டோடு கொண்டு வர வேண்டும்.
தேர்வு எழுதும் மாணவர்கள்,
கருப்பு மை பால்பாயின்ட் பேனாவினால்,
மட்டுமே எழுத வேண்டும்.
22ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை, உயிர்
அறிவியல், புவி, வானவியல், கடல் மற்றும்
கோளவியல் அறிவியல், கணித அறிவியல்
பாடத்திற்கான தேர்வும், மதியம் 2 மணி முதல் 5
மணி வரை, வேதி அறிவியல், இயற்பியல் அறிவியல்
மற்றும் பொறியியல் அறிவியல்
பாடத்திற்கான
தேர்வு நடைபெறும்.தேர்வு மையத்தில், நகல்
நுழைவு சீட்டு வழங்கப்பட மாட்டாது. தேர்வு எழுதும்
விண்ணப்பதாரர்கள், 30
நிமிடத்திற்கு முன்னதாகவே வரவேண்டும். மேலும்
விபரங்களுக்கு 04565 241 400, 241 521, 94438 50679,
94436 09776, என்ற எண்ணிலும்,
swamy23@rediffmail.com, npswamy@cecri.res.in என்ற
இணையதள முகவரியில்
தொடர்பு கொள்ளுமாறு ஒருங்கிணைப்பாளர்
பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment