ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்
நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
வரும் 2016ல், மத்திய
அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள
விகிதத்தை நிர்ணயிக்க,
ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது. இதன்
தலைவராக, நீதிபதி அசோக்குமார் மாத்துார்,
உறுப்பினர்களாக, விவேக்ரே, ரத்தின்ராய்,
செயலராக, மீனாஅகர்வால் ஆகியோர்
நியமிக்கப்பட்டனர். லோக்சபா தேர்தல்
காரணமாக, இந்தக் குழுவின்
செயல்பாடுகள்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.தேர்தல் நடைமுறைகள் முடிந்த
நிலையில், புதிய அரசு அமைந்தபின், இக்குழு,
அலுவல்களை தீவிரப்படுத்தி வருகிறது.
முதற்கட்டமாக, அலுவலர்கள் நியமிக்கும்
பணி நடக்கிறது. இந்த அலுவலர் குழுவில்,
சார்பு செயலர், தனிச்செயலர் உட்பட, 24
பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த அலுவலர்களை, பிற துறைகளில் இருந்து நியமிக்க,
மத்திய பணியாளர் துறையிடம் விவரம் கேட்டுள்ளனர்.
இந்த நியமனத்திற்குப் பின், 18 மாதங்கள்,
ஏழாவது ஊதியக்குழு செயல்படும். அடுத்த
ஆண்டு, ஆகஸ்ட் வரை, பல்வேறு துறைகளின், தற்போதைய
சம்பள விகிதங்களை ஆய்வு செய்து, புதிய
விகிதத்தை நிர்ணயிக்கும்.
No comments:
Post a Comment