Wednesday, June 04, 2014

பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு

பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் தொடர்பான விவரங்களை,
தேர்வுத்துறை இணையதளத்தில்,
மாணவர்கள் இன்று (ஜூன் 4) முதல் பதிவிறக்கம் செய்யலாம்,' என, தேர்வுத்
துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
வெளியான பின், விடைத்தாள் நகல் கேட்டு, 80
ஆயிரம் மாணவர்களும், மறுகூட்டலுக்காக 3
ஆயிரம் மாணவர்களும், தேர்வுத்
துறைக்கு விண்ணப்பித்தனர். நகல் கேட்ட
மாணவர்களின் விடைத்தாள்களை, மாவட்டம்
வாரியாக கணக்கிட்டு, அவை 'ஸ்கேன்'
செய்யப்பட்டுள்ளன. மேலும்,
மறு கூட்டலுக்கான பணிகளும் நிறைவுற்றன.
இவற்றை, தேர்வுத் துறை இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யும் பணிகள் நேற்றுடன்
முடிந்தது. இன்று முதல் (ஜூன் 4)
பாடவாரியாக விடைத்தாள் நகல் மற்றும்
மறுகூட்டல் விவரங்களை மாணவர்கள்
பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வுத்துறை விடைத்தாள் நகல் மற்றும்
மறுகூட்டல் பணிக்கான முகாம் அலுவலர்
அமுதவல்லி கூறியதாவது: பிளஸ் 2
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல்
விவரங்களை தேர்வுத்
துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்
பணிகள் நேற்றுடன் முடிந்தன.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குனர்
இன்று (ஜூன் 4) முறைப்படி அறிவிப்பார்.
இதன் பின், காலை 10:00 மணிக்குமேல்
விண்ணப்ப எண் உள்ளிட்ட
விவரங்களை மாணவர்கள் குறிப்பிட்டு,
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல்
விவரங்களை இணையதளத்தில் பதிவிறக்கம்
செய்யலாம். இந்த விவரம் 5 நாட்கள் மட்டும்
தேர்வுத் துறை இணையதளத்தில் இருக்கும்.
அதன் பின்,
முதன்மை கல்வி அலுவலகங்களில்
சென்று மாணவர்கள் விவரம்
பெற்றுக்கொள்ளலாம், என்றார்.

No comments:

Post a Comment