அரசு உதவி பெறும் பள்ளிகளில், கல்விக்கட்டணம் போர்வையில், பல ஆயிரம் ரூபாய் வரை, மாணவர்களிடம், கட்டாய வசூல் செய்யப்படுவதால்,
பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும்
உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்
மாணவர்களது கல்விக்கட்டணம்,
தேர்வுக்கட்டணம் உள்பட
அனைத்து கட்டணங்களையும், தமிழக
அரசு ஏற்றுக்கொள்கிறது. மேலும்,
பள்ளி பராமரிப்பு, ஆசிரியர் சம்பளம்
உள்ளிட்ட, பல தலைப்புகளில்,
நிதி ஒதுக்கீடும் செய்யப்படுவதால்,
மாணவர்களிடம், பணம் வசூலிப்பதற்கு,
தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசு நிதியுதவி பெறும்
பள்ளிகளில், இந்த விதிகள்
கண்டு கொள்வதில்லை.
ஓரிரு பள்ளிகளை தவிர, மற்ற பள்ளிகள்,
சுயநிதி பள்ளிகளுக்கு இணையாக,
மாணவர்களிடம், கட்டணம் வசூலிக்கின்றன.
இதற்கு, எவ்வித ரசீதும் வழங்குவதில்லை.
சேலம் மாநகரில் மட்டும், 20க்கும் மேற்பட்ட,
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன.
இவற்றில், தற்போது, கல்வியாண்டு வகுப்புகள்
துவங்கியுள்ள நிலையில், 3,000 முதல், 12
ஆயிரம் ரூபாய் வரை, ஒவ்வொரு மாணவரிடமும்,
கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. கடந்த
ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில், 20 சதவீதம்
வரை, வசூலை அதிகரித்திருக்கும்,
இப்பள்ளிகளின் அடாவடியால், பெற்றோர்கள்
கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, பெற்றோர்கள் சிலர்
கூறியதாவது:
சேலம் மாநகரில், பல பகுதிகளில்,
அரசு உதவி பெறும் பள்ளிகள்
மட்டுமே உள்ளது. உதவி பெறும்
பள்ளிகளையும்,
அரசு பள்ளிகளாகவே கருதுவதால்,
அப்பகுதிகளில்,
அரசு பள்ளி துவக்கப்படுவது இல்லை.
இதனால், வசதியில்லாத பெற்றோரும், தங்கள்
குழந்தைகளை, இந்த பள்ளியில் சேர்க்க
வேண்டிய கட்டாயம் உள்ளது. இப்பள்ளிகளில்,
கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது என,
அரசு உத்தரவிட்டிருந்தும்,
அதை கண்டுகொள்ளாமல், ஆண்டுக்காண்டு,
வசூலை அதிகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பள்ளி நிர்வாகத்திடம் கேட்டால்,
"பணம் கட்ட முடியவில்லை என்றால், "டிசி'
வாங்கிச் செல்லுங்கள்' என மிரட்டல்
விடுக்கின்றனர். புகார் செய்வதாக
கூறினாலும், "எங்கு வேண்டுமானாலும் புகார்
செய்யுங்கள், கவலை இல்லை' என,
விரட்டுகின்றனர். அதற்கேற்ப,
கல்வித்துறை அலுவலர்களும்,
நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடக்கும்,
வசூல் வேட்டையை கண்டுகொள்வதில்லை.
ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட
பல்வேறு நிதி வழங்கும் பள்ளிகளிலேயே,
மாணவர்களுக்கு இலவச
படிப்பை உறுதி செய்ய முடியாத,
அரசு அலுவலர்கள், சுயநிதி பள்ளிகளை,
எப்படி கட்டுப்படுத்த முடியும். அதனால்,
கல்வித்துறை மீது இருந்த
நம்பிக்கை குறைந்து விட்டது, என்றனர்.
No comments:
Post a Comment