தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் படிப்பில் சேருவதற்கான ஆர்வம் மாணவ, மாணவிகள் இடையே அதிகரித்து வருகிறது.
இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு அதிக வரவேற்பு இல்லாததால் பெரும்பாலான தனியார் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால் அரசு பணி கட்டாயம் கிடைக்கும் என்பதால் ஏற்கனவே பி.எட் படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வருகிறார்கள்.
மேலும், பிளஸ் 2 முடித்தவர்களும், பி.ஏ., பி.எஸ்.சி., பட்டபடிப்புகளில் சேர ஆர்வம் காட்டுகிறார்கள். பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து ஒரு வருடம் பயிற்சியை முடித்தால்தான் தகுதித் தேர்வு எழுத முடியும். எனவே, கடந்த 5 வருடங்களாக பி.எட் கல்லூரிகள் அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் தற்போது 657 பி.எட் கல்லூரிகள் உள்ளன. இதில் 21 கல்லூரிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளாகும்.
மேலும் இந்த வருடத்துக்கு 65 ஆயிரம் மாணவ, மாணவிகள் பி.எட் படிப்பை முடிக்கிறார்கள். இந்த வருடம் மேலும் 40 புதிய பி.எட் கல்லூரிகள் வர இருப்பதாக தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:–
40 புதிய கல்லூரிகள் தொடங்க டெல்லியில் உள்ள என்.சி.டி.இ அங்கீகாரம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத்தில் இணைப்பு அனுமதி பெற்றால்தான் கல்லூரியை தொடங்க முடியும். அதற்கு 10 சான்றிதழ் அவசியம். சுற்றுச் சூழல் சான்று, கட்டிடத்தின் உறுதித் தன்மை, டி.டி.பி., அப்ரூவல் உள்ளிட்ட இந்த சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். முறையாக விண்ணப்பத்தால் அனுமதி வழங்கப்படும்.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்குவது குறித்து அரசிடம் இருந்து விரைவில் அறிவிக்கை வரும். அவை வந்தவுடன் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கும்.
பி.எட் 2 வருட படிப்பு இந்த ஆண்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை. அடுத்த ஆண்டு (2015–16) தான் இந்த புதிய முறை தொடங்கும். இதற்காக என்.சி.டி.ஏ, பொதுமக்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு வருகிறது
No comments:
Post a Comment