கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள்
அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன.
இந்நிலையில் பள்ளி நிர்வாகங்கள்
கடை பிடிக்க வேண்டிய புதிய
கட்டுப்பாடுகளை கல்வித்துறை
அறிவித்துள்ளது.
இதன் விவரம்அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன.
இந்நிலையில் பள்ளி நிர்வாகங்கள்
கடை பிடிக்க வேண்டிய புதிய
கட்டுப்பாடுகளை கல்வித்துறை
அறிவித்துள்ளது.
வருமாறு:பள்ளி தொடங்கிய நாள்
முதலே கால அட்டவணை சரியாக
பின்பற்றப்பட வேண்டும். நடத்த
வேண்டிய பாடம் குறித்து முறையாக
குறிப்புகள்
தயாரித்து மாணவர்களுக்கு புரியும்ப
டி நடத்த வேண்டும். கற்பித்தலுக்காக
பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள
கம்ப்யூட்டர்கள், புரொஜக்டர்கள்,
மைக்குகளை பயன்படுத்த வேண்டும்.
வகுப்பறைகளில் ஆசிரியர்கள்
செல்போன் உபயோகிப்பதால்
மாணவர்களின் கற்றல் திறன்
பாதிக்கப்படுகிறது.
எனவே அவ்வாறு செயல்படும்
ஆசிரியர்கள் மீது அரசு பணியாளர்
நடத்தை விதிப்படி ஒழுங்கு
நடவடிக்கை எடுக்கப்படும்.
செல்போன்களை அதற்கென
ஒதுக்கப்பட்ட அறைகளில்
வைத்து விட்டு வகுப்பறைக்கு செல்ல
வேண்டும்.
இதனை தலைமையாசிரியர்கள்
கண்காணிக்க வேண்டும்.
மாணவர்களை அவர்களது உயரம்,
செவித்திறன், கண் பார்வை புலன்
திறன் அடிப்படையில்
வரிசைப்படி அமர வைக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆசிரியர்களும் கையில்
பாடக்குறிப்பேடு வைத்திருக்க
வேண்டும். தலைமையாசிரியர்கள்
பள்ளிகள் துவங்குவதற்கு முன்
அனைத்து வகுப்பறையிலும் மின்சார
கசிவு, கட்டிட தன்மை, பூச்சிகள்
இருக்கின்றனவா என்பதை ஆய்வு
செய்த பின்னர்
மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.
மேற்கண்ட
கட்டுப்பாடுகளை பள்ளி நிர்வாகங்கள்
தவறாமல் பின்பற்ற வேண்டும்
என்று கல்வித்துறை
அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment