Wednesday, June 04, 2014

விருதுநகரில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 5-ம் தேதி நடைபெறுகிறது

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்வது தொடர்பாக தலைமையாசிரியர்கள் கூட்டம் விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 5-ம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. அதையடுத்து, இம்மாவட்டத்தில் இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவை வரும் 12-ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக அன்றைய நாளில் மதிப்பெண் பட்டியல் எவ்வாறு விநியோகம் செய்ய வேண்டும். அதில் பிழைகள் இருந்தால் உடனே திருத்தம் செய்து சரியான முறையில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல், பள்ளி வளாகத்திலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்தல், 11-ம் வகுப்பில் மாணவ, மாணவிகளை சேர்ப்பது போன்ற பணிகள் குறித்து தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட இருக்கிறது. எனவே குறிப்பிட்ட நாளில் நடத்தப்பட இருக்கிற கூட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்

No comments:

Post a Comment